பக்கம்:பாரம்பரியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியன் உரை குழந்தையின் உள்ளம் எவ்வாறு மலர்கின்றது என் பதை அறிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதைப்பற்றி மேல்நாட்டு உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ள உண்மைகளைப் படித்தும், பிறப்பி லிருந்து ஐந்து வயதாகும் வரை சில குழந்தைகளைக் கவ னித்து அவர்கள் மனமலர்ச்சியைக் குறித்துவைத்தும் நான் குழந்தை உள்ளம் என்ற நாலே எழுதினேன். கலைமகள் வ்ெளியீடாக வெளியான அந்நூலைப் பலரும் பாராட்டி எழுதினர்கள். இப்படிப்பட்ட உளவியல் நால்கள் எளிய முறையில் தமிழில் வெளிவரவேண்டும் என்று கூறினர்கள். அதல்ை குழந்தையின் மனவளர்ச்சியோடு பெரிதும் தொடர்புடைய பாரம்பரியத்தைப்பற்றியும் ஆராய்ந்து எழுதலாமெனத் துணிவு கொண்டேன். பாரம்பரியத்தைப்பற்றியும் அது எவ்வளவு தூரம் மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்பதுபற்றி யும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசி யம். அத்துடன் சூழ்நிலையின் முக்கியத்தைக் குறித்தும் உணர்ந்திருக்கவேண்டும். இவற்றைப்பற்றியெல்லாம் கட் டுரைகளாகத் தொடர்ந்து தினமணியில் எழுதி வந்தேன். அவற்றுடன் வேறு சில கட்டுரைகளும் சேர்த்துத் தொகுத் ததே இந்நூல். எளிதில் விஷயங்கள் விளங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பல படங்களையும் ஆங்காங்கு இணைத்துள்ளேன். பாரம்பரியத்தைப்பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவுமானல் எனது முயற்சி வெற்றி பெற்றதெனக் கருதுவேன். கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட அன்புடன் அனுமதி தந்த தினமணி ஆசிரியருக்கும் இந்நூலுக்கு முகவுரை எழுதி உதவிய டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும். சென்னை } 7–2–49, பெ. துன ர ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/9&oldid=820486" இலிருந்து மீள்விக்கப்பட்டது