பக்கம்:பாரம்பரியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபந்தம் ويلي பெரிய ஆராய்ச்சியாளர்களுக்கே அதற்கு மேல் போக முடியவில்லை யாதலால் சாதாரண மக்களின் மூளையை அனுவசியமாகக் குழப்ப வேண்டாமென்று சில பெரியோர்கள் மனிதனேக் கடவுள் சிருஷ்டி செய்தார் என்று சுலபமாகச் சொல்லி வைத்தார்கள். இந்த உலகத் திற்கு எப்படியோ வந்தாய் விட்டது; இனித் கிரும்பவும் வாாமலிருப்பதற்கு வழி தேடினல்போதும் என்பது அவர்களது கருத்து. அதற்கே ஒரு ஆயுள் காலம் போதா திருக்கும்போது வந்த விதத்தைப் பற்றிச் சாதாரண மக்கள் தங்கள் மனத்தைக் கலக்கிக் கொள்வானேன் என்று அவர்கள் நினைத்தார்கள் போலும். ஆனல் ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு கினைக்கிற தில்லை; நினைத்துத் திருப்தியடையவும் கூடாது. அவர்கள் சிருஷ்டி மர்மங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வெளிப் படுத்த வேண்டும். அது அவர்களுடைய கடமை. அதுவே அறிவு வளர்ச்சிக்கு ஆதாாம். அவ்வாறு ஆராய்ந்ததின் பலகை அமீபம் போன்ற சிறு ஜந்துவிலிருந்து படிப்படியாக வெவ்வெறு உயிர்கள் தோன்றிக் கடைசியாக மனிதனும் உண்டாகி இருக்கிருன் என்று கண்டிருக்கிரு.ர்கள். இவ்வாறு ஒரு உயிர் வர்க்கத் கிலிருந்து வேருெரு உயிர் வர்க்கம் தோன்றுவதையே பரிணுமம் என்று சொல்லுகிருேம். உஷ்ணமாக இருந்த சந்திான் மெதுவாகக் குளிர்ந்துகொண்டே வந்து இப் பொழுது மிகக் குளிர்ந்து விட்டது. இது ஒரு வகையான பரிணுமம். வெள்ளை நாய் ஒன்றிருக்கிறது. கறுப்பு காய் ஒன்றிருக்கிறது. இவையிாண்டையும் கலப்பினச் சேர்க்கை செய்தால் கரும்புள்ளிகளையுடைய குட்டிகள் சில பிறக் கின்றன. இவ்வாறு நிறத்திலும், தன்மைகளிலும் மாறு பட்ட ாேய்கள் உண்டாவது ஒரு வகையான பரினமம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/90&oldid=820487" இலிருந்து மீள்விக்கப்பட்டது