பக்கம்:பாரம்பரியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பார்ம்பரியம் யாகப் புது உயிர்கள் தோன்றும்போது இந்த ஜீன்கள் மாருமலிருக்கின்றன. ஆனல் எப்பொழுதாவது ஒரு ஜீன் மாறுபாடடைவதும் உண்டு. அப்படியால்ை அதிலிருந்து புதிய வர்க்கம் ஒன்று தோன்மம். இம்மாதிரி ஏற்படுவ தற்குச் சடிகி மாற்றம் (Mutation) என்று பெயர். சடிதி மாற்றத்தால் புதிய வர்க்கங்கள் தோன்று கின்றன. இந்த மாற்றம் எப்பொழுதாவது ஏதாவது ஒருவகையில் எற்ப்டுகின்றது. பெரும்பாலும் அதனல் ஒரு வர்க்கம் அபிவிருத்தியடையாமல் முன்னிருந்ததை விடக் குறைபாடுள்ளதாகவே மாறுகிறது. அப்படி மாறி குல் அந்தப் புதிய வர்க்கம் பெருகாமல் விரைவில் அழிந்து போகும். ஆனல் சில அரிய சந்தர்ப்பங்களிலே சடிகி மாற்றத்தால் ஏற்படும் புதிய வர்க்கம் முன்னிருங்தை விடச் சிறந்ததாக அமையும். அதுவே நாளடைவில் பெருகும். ஆதலால் சடிகி மாற்றத்தால் மட்டும் புது வர்க்கம் உண்டாகி உலகில் கில்ேக்கும் என்று சொல்லக் கூடாது. நல்ல அம்சங்கள் பொருங்கிய வர்க்கமே உலகில் உயிர் வாழ முடியும். இயற்கை அப்படிப் பட்டவை களேயே வளர அனுமதிக்கிறது. ஆதலால் சடிகி மாற்றத் தால் உலகில் நிலை பெறுவதற்கு வேண்டிய சிறப்பியல்பு களும் பெற்ற புதிய வர்க்கமே பரிணுமக்கிற்குக் காரண மாக அமைகின்றது. லாமார்க் (Lamarck) என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பரிணுமம் உண்டாவதற்கு வேருெரு காரணம் கூறினர். அதாவது பெற்ருேர்கள் தாமாகவே உண்டாக்கிக் கொண்ட தன்மைகளும் குழந்தைகளுக்குப் பாரம்பரிய மாக அமைகின்றது என்றும், அவ்வாறு அமைவதாலேயே பரிணுமம் ஏற்படுகிறதென்றும் அவர் கூறினர். ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/93&oldid=820490" இலிருந்து மீள்விக்கப்பட்டது