பக்கம்:பாரம்பரியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் விளக்கம் 87 வருக்கம்-இனம்-அங்கி மல்லிகை, குரங்கு, மனிதன் மூன்றும் வெவ்வேருண மூன்று வருக்கங்கள் (Species). அக்கிமல்லிகையிலே சிவப்புப் பூவை உடையது ஒரு இனம். வெள்ளைப் பூவை உடையது மற்ருெரு இனம். அவை இரண்டும் ஒரே வருக்கத்தைச் சேர்ந்த இரு இனங் கள். இங்கு குறித்துள்ள பொருள்களிலேயே இவ்விரு சொற்களும் இந்த நாலில் காணப்படுகின்றன. விந்தனு(Sperm)-ஆணின் விந்துச்சுரப்பியில்(Testis) உண்டாகும் உயிரணு. ஒரு தடவையில் வெளிப்படும் விந்துவில் லக்ஷக்கணக்கான விந்தனுக்கள் இருக்கும். அவற்றிற்கு வால் போன்ற ஒரு உறுப்பு இருப்பதால் அதைச் சுழற்றுவதன் மூலம் முன்னேறிச் செல்லும். வெளிப்பட்டுச் சுமார் ஒரு வாரம் வரை இவை ஜீவித் திருக்கும். விந்தணுச் சுரப்பி (Testis)-விந்து உண்டாகும் உறுப்பு. ஜீன்கள் (Genes)-நிறக்கோலில் உள்ள நுட்பமான அம்சங்கள். இவைகள்தான் பாரம்பரிய அமைப்புக்குக் காரணமாகின்றன. pன் சடிதி மாற்றம் (Mutation)-எவ்வாறு இம் மாறு பாடு உணடாகிறதென்று கிர்ணயிப்பது சிரமம். ஆனல் இம்மாறுபாட்டாலேயே புதிய வருக்கங்கள் தோன்ற முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/98&oldid=820495" இலிருந்து மீள்விக்கப்பட்டது