பக்கம்:பாரும் போரும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

ஆறுகளின் கரைகளிலே அரசோச்சிய சுமேரிய நாகரிகம் அழிக்கப்பட்டது. எகிப்து நாட்டில் எழில் பெறு சிறப்புடன் இலங்கிய பாரோ நாகரிகம் பாழ டைந்தது. பழஞ்சிறப்புப் .ெ ப ற் ற கிரீட் தீவில் மிளிர்ந்த மெசானிய நாகரிகம் வீழ்ந்தது.

ஹோமர் என்ற உலக கவியை ஈந்து, பேரறிஞர் சோக்ரதரைப் பெற்றெடுத்துக் கலையையும் அறிவி யலையும் வளர்த்துக் குன்ருச் சிறப்போடு வாழ்ந்த கிரேக்க நாகரிகமும் குன்றியது. சீசரையும், பாம்பி யையும், சீசேரோவையும் ஈன்று, உலக அரசியாய் ஈடும் எடுப்பு மற்று வாழ்ந்த உரோமப் பேரரசு அழி வுற்றது. இந்திய நாட்டில் இணையற்ற புகழோடு வாழ்ந்த மூவேந்தர் முடியரசு, மோரியர் பேரரசு, குப்தரின் கோட்ைசி, மொகலாயரின் முடியாட்சி யாவும் கனவாய்ப் பழங்கதையாய்ப் போயின.

திராவிட நாகரிகத்தை அழித்து ஆரிய நாகரிகம் ஓங்கியது. மெசானிய நாகரிகத்தை அழித்துக் கிரேக்க நாகரிகம் ஓங்கியது. கிரேக்க நாகரிகத்தின் அழிவில், உரோம நாகரிகம் உயர்சிறப்புக் கொண் டது. இவ்வாறு அழிக்கப்பட்ட பிணக்குவியலின் மீது அரியணை அமைத்துத்தான், இன்று பெருமிதத் தோடு ஐரோப்பிய நாகரிகமும், அதனைச் சார்ந்து வாழும் பிற நாகரிகங்களும் வீற்றிருக்கின்றன. இன்றைய நாகரிகம் இந்நிலைக்கு உயர்வதற்கு எத்தனைப் போராட்டங்கள் ! எத்தனை அழிவுகள் ! உலக வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோ மால்ை இவ்வுண்மை தெற்றென விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/10&oldid=595519" இலிருந்து மீள்விக்கப்பட்டது