பக்கம்:பாரும் போரும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்' என்ற உயர்மொழி பொய்யாகுமா! ஹிட்லரின் ஆதரவாளர்கள்நாட்டில் பெருகினர். G5ểu gingitudás sist (National Socialist Party) என்ற ஒரு புதிய கட்சியை ஹிட்லர் தோற்று வித்தான். அதன் குறுக்கமே நாஜி (Nazi) என்ற சொல்லாகும். நாட்டின் பொதுத் தேர்த லில் ஹிட்லர் கலந்துகொண்டு ஜெர்மானிய அர சியலேயும் கைப்பற்றினுன்; ஆட்சியைக் கைப் பற்றியதும், நாட்டில் வேறு கட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது என்று ஆணையிட்டான். இம் மென்ருல் சிறைவாசம் ; ஏனென்ருல் வனவாசம் ” என்ற பழமொழி இவன் ஆட்சிக்கு மிகவும் பொருத் தமாக இருந்தது. ஹிட்லர் என்ன எண்ணினுனே அதையே எல்லாரும் எண்ண வேண்டும். அவன் கட்சிக் கொள்கையையே செய்தித் தாள் களும் நூல்களும் நாடகங்களும் பிரசாரம் செய்ய வேண்டும். அவனுக்கு எதிராக நாவசைத்தவர்கள், வீதியில் திரியும் வெறிநாயைவிடக் கேவலமாகச் சுட்டுத்தள்ளப்பட்டனர். அவன் ஆட்சியை விரும் பாத அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கலைஞர் களும் நாட்டைவிட்டு வெளியேறினர்; வெளியேற் றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்களில், இந் நூற்றண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ் தீனும் ஒருவர். ஜெர்மன் நாட்டின் வறுமைப் பிணியையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போ க் க, ஹிட்லர் பல விசித்திரமான வழிகளைக் கையாண் み

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/101&oldid=820500" இலிருந்து மீள்விக்கப்பட்டது