பக்கம்:பாரும் போரும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 டான். நாட்டின் எல்லாத்துறைகளிலும் செல்வாக் கும் திறமையும் பெற்றிருந்த யூதர்களையெல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, ஜெர்மானிய இளைஞர்களை அத்துறைகளில் அமர்த்தின்ை. படைக்கலங்கள் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற் சாலைகளை நிறுவி, எஞ்சியிருந்தவர்களுக்கு வேலை கொடுத்தான். இவ்வாறு வேலையில்லாத் திண்டாட் டத்தைப் போக்கியவுடன் இரண்டாம் உலகப் போருக்கு வேண்டிய ஆயத்தங்களில் மூழ்கினன். முதல் உலகப்போரில்ை சோர்வடைந்த மற்ற நாடுகள், போரில் அதிக அக்கறை கொள்ளாமல் நா ட் டி ன் முன்னேற்றத்தில் ஈடுபட்டிருந்தன. ஹிட்லர் இவ்வளவு விரைவில் போர் முழக்கம் செய் வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; உலக நாடுகள் கழகத்தின் ஒப்பந்தங்களையெல்லாம் மீறி, ஜெர்மானிய மக்கள் எந்தெந்த நாடுகளில் சிதறி வாழ்கிருர்களோ, அந்நாடுகளையெல்லாம் கைப்பற்று வேன்' என்று கூறி 1938-இல் ஆஸ்திரிய நாட்டின் மேல் படை செலுத்தி, அந்நாட்டை வெற்றிகொண் டான்; அடுத்த ஆண்டில் செக்கோஸ்லேவேகியா வையும் வென்றன்; போலந்தின்மீது போர்தொடுத் தான். ஹிட்லரின் புயல்வேகப் படையெடுப்பையும் வெற்றியையும் கண்ட பிரான்சும், பி ரி ட் ட னு ம் போர் செய்வதற்கேற்ற வாய்ப்பும் வசதியும் பெற்றிரா விட்டாலும், வேறுவழியின்றி ஜெர்மனியின் மீது போர் அறிவிப்புச்செய்யவேண்டியதாயிற்று. உடனே ஹிட்லர், ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறி உருசிய நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/102&oldid=820501" இலிருந்து மீள்விக்கப்பட்டது