பக்கம்:பாரும் போரும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கொண்டான். ஒப்பந்தம் செய்து கொண்டாலும், உருசிய நாட்டுத் தலைவனை ஸ்டாலின் ஏமாளியாக இருக்க விரும்பவில்லை.உருசிய நாட்டின் எல்லையி லிருந்த போலந்தின் கிழக்குப் பகுதிக்கு உருசியப் படையை அனுப்பி வைத்தான். ஆனல் பயிற்சியும் ஆற்றலும் கொண்ட ஜெர்மானியப்படைமுன், உரு சியப்படைகள் நிற்கமுடியவில்லை. போலந்து முழுவ தும் ஜெர்மானியரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பிரான்சு அரசாங்கம் போருக்கு வேண்டிய ஆயத் தங்களில் சுறுசுறுப்பாக இறங்கியது; எல்லேயில் ஒரு பெரும்படையை நிறுத்தி, அரண் செய்திருந்தது. ஜெர்மானியப் படை டென்மார்க், நார்வே, ஆலந்து, பெல்ஜியம் முதலிய சிறு நாடுகளே எளிதில் வென்று வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படை, தன் போர்க்கருவிகளையெல்லாம் போட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஒட்டமும் நடையுமாக இங்கிலாந்து திரும்பியது. பிரெஞ்சுப் படை சூறைக்காற்றில் பட்ட எச்சில் இலைபோல் பறந்தோடிவிட்டது. ஜெர்மானியப்படை வெற்றி முழக்கத்தோடு பாரிசில் நுழைந்தது. பிரெஞ்சு நாடு சமாதானத்தை வேண்டி ஹிட்லரிடம் மண்டி யிட்டது. அவ்வாண்டு ஆகஸ்டுத் திங்களில், ஜெர்மா னியப் போர் விமானங்கள் இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களின் மீதும் படைக்கலத் தொழிற் சாலைகளின்மீதும் குண்டுமாரி பொழிந்தன. ஆனல் அதற்குள்ளாக ஆங்கிலநாட்டுத் தொழிற்சாலைகளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/103&oldid=820502" இலிருந்து மீள்விக்கப்பட்டது