பக்கம்:பாரும் போரும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 லிருந்து அரிகேன் (Hurricane), ஸ்பிட்ஃபைர் (Spit Fire) என்ற விமானங்கள் வெளிவரத்தொடங்கின. அவை ஜெர்மானிய விமானங்களைவிட வேகமும் வலிமையும் வாய்ந்தவை. ஒரேநாளில் எண்பத் தைந்து ஜெர்மானிய விமானங்களேஅவை அழித்தன. ஜெர்மனியின் விமானத்தாக்குதல் பெருந்தோல்வி யடைந்தது. இத்தோல்வி இரண்டாம் உலகப் போரில் ஒரு திருப்புமையமாகும். இத்தாக்குதலில் பிரிட்டன் தோல்வியடைந்திருந்தால், மேற்கு ஐரோப்பியக் கண்டம் முழுவதும் ஜெர்மானியரின் ஆளுகையின் கீழ் வந்திருக்கும். அக்கண்டம் முழு வதிலும் இருக்கும்படியான மூலப்பொருள், தொழிற் சாலைகள் முதலிய யாவும் ஜெர்மானியரின் கையில் சிக்கியிருக்கும். பிறகு அமெரிக்காவையும் உருசியா வையும் தனித்தனியே எதிர்த்துப் போராடி, ஜெர் மனி உலக அரசியாக, வெற்றிக்கொடி நாட்டியிருந் தாலும் வியப்பொன்றுமில்லை. இதற்குள்ளாக இதாலி, ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டன் பிரான்சு ஆகிய நாடுகளின் மேல் போர் அறிவிப்புச் செய்தது. பிரிட்டன் போதிய அளவு படையை இங்கிலாந்தில் வைத்துக் கொண்டு, மீதிப்படையை ஐரோப்பாவிற்குள் அனுப் பியது. அப்படைக்குத் தலைமை தாங்கிய ஆர்ச்பால்டு வேவல், இதாலியப் படைகளைத் தாக்கினர். இதாலிய கப்பற்படை நாசமாக்கப்பட்டது. வட ஆப்பிரிக்கா வில் இதாலிய நிலப்படையைத் தாக்கி முறியடித்த தோடு, ஓர் இலட்சத்து முப்பதாயிரம் பேரைச்சிறைப் பிடித்தார் வேவல். இதாலியக் குடியேற்ற நாடுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/104&oldid=820503" இலிருந்து மீள்விக்கப்பட்டது