பக்கம்:பாரும் போரும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ளான எரித்திரியா, சோமாலிலண்ட், அபிசீனியா முதலிய பகுதிகளைத் தாக்கி வெற்றி கொண்டார். இதற்குள்ளாக ஹிட்லர் தன் போர்க்குதிரையைக் கிழக்கு நோக்கிச் செலுத்தின்ை ; கிரீசை வென்ருன்; உருசிய நாட்டின் மேல் புயல் போலப் பாய்ந்தான். ஜெர்மானியப்படை மிக வேகமாக முன்னேறி லெனின் கிரேடு வரை வென்ற தோடல்லாமல், மாஸ் கோவிற்கு முப்பது கல் தொலே வரையிலும் சென்று விட்டது. டானெட்ஸ், டான் ஆகிய ஆறுகளின் சம வெளிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களும் இரும்புச் சுரங்கங்களும் கைப்பற்றப்பட்டன. உருசிய நாட் டின் கோதுமைக் களஞ்சியமான உக்ரெயினும் ஜெர் மானியரால் கைக்கொள்ளப்பட்டது. உலகப் போரை வெற்றிகரமாக வென்று முடிக் கும் சூழ்நிலையும் நல்வாய்ப்பும் ஹிட்லருக்கு ஏற் பட்டுவிட்டன. கிட்டத்தட்ட ஐரோப்பாக் கண்டம் முழுவதும் அவன் காலடியிலிருந்தது. போருக்கு வேண்டிய உணவுப் பொருள்களும், மற்றப் பொருள் களும் அளவுக்குமீறி அவனிடத்திலிருந்தன. பிரிட்டனும் ,உருசியாவும் அமெரிக்க உதவிய்ை நாடி நின்றன. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஹிட்லரின் கூட்டுப்படைகள் முழு மூச்சோடு தாக்கின. இச்சமயத்தில் ஜப்பானியர் எவ்விதப் போர் அறிவிப்புமின்றி, ஹாவாய்த் தீவின் சிறந்த துறைமுகப்பட்டினமான பெர்ல் என்ற இடத்தில் தங்கியிருந்த அமெரிக்கக் கப்பற் படையின், மேல் விமானத் தாக்கு த ல் புரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/105&oldid=820504" இலிருந்து மீள்விக்கப்பட்டது