பக்கம்:பாரும் போரும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 னர். ஜெர்மானியர் தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களால் மிக விரைவோடும் தீவிரத்தோடும் கணக்கற்ற ஆங் கிலக் கப்பல்களை மூழ்கடித்தனர். ஆனல் ஆங்கிலக் கப்பற்படை தன் முழுவலிமையோடு தாக்கி, ஜெர் மானிய நீர் மூழ்கிக் கப்பல்களை அழித்தது. வட ஆப்பிரிக்காவில் இதாலி முதலில் இழந்த நாடுகள் யாவும் திரும்பவும் கைப்பற்றப்பட்டன. ஜெர்மானியப்படை, எகிப்து நாட்டின் சிறந்த கப்பல் தளமான எல் அலோமின் வரையிலும் கைப்பற்றிக் கொண்டது. ஹிட்லர் மீண்டும் உருசிய நாட்டின் மீது தன் தாக்குதலைத் தொடங்கினன். சிறந்த எண் ணெய்க் கிணறுகள் அடங்கிய காகசசின் பெரும் பகுதி ஜெர்மானியரால் கைக்கொள்ளப்பட்டது. ஜெர்மன்படை ஸ்டாலின்கிரேடையும் நெருங்கிவிட் டது. இவ்வெற்றி உலகப்போரின் இரண்டாம் திருப் புமையாகும். ஸ்டாலின்கிரேடு வெல்லப்பட்டால், உருசிய நாட்டின் எண்ணெய்க்கிணறுகளின் பெரும்பகுதி ஜெர்மானியர் கைக்குச் சென்றுவிடும். பிறகு உருசிய நாட்டிற்கு உய்வு கிடையாது. எகிப் தில் அலெக்சாந்திரியா வெல்லப்பட்டால், சூயஸ் கால்வாய் எளிதில் ஜெர்மானியர் கைக்குச் சென்று விடும். பிறகு இந்தியாவின் மீதும் தூரக்கிழக்கு நாடு கள் மீதும் படையெடுப்பது எளிதாகிவிடும். ஜப்பா சிையரின் போர்ப் பலமும், ஜெர்மானியரின் பலமும் ஒன்று சேர்ந்துவிடும். மேலும் அட்லாண்டிக் ம்ா கடலில், உருசியா, பிரிட்டன் நாடுகளுக்கு வரும் அமெரிக்க உதவிக் கப்பல்களை மூழ்கடித்து, அத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/106&oldid=820505" இலிருந்து மீள்விக்கப்பட்டது