பக்கம்:பாரும் போரும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 01 உருசியர்கள் ஜெர்மானியப் படையை உருசிய நாட்டின் எல்லைக்கு வெளியே வி ர ட் டியதோ டு, உருமேனியா, ஹங்கேரி முதலிய நாடுகளின் மீதும் படையெடுத்தனர். நேசப்படைகள் பிரான்சின் எல்லையில் வந்து குவிந்தன. பாரிசு மீட்கப்பட்டது. சில நாட்களில் ஜெர்மன் நாட்டின் மேற்கெல்லை யைத் தாண்டி, ரைன் ஆற்றங்கரையை நேசப் படைகள் அடைந்தன. அமெரிக்க விமானங்களும் ஆங்கில விமானங்களும் இரவுபகலாகத் தொடர்ந்து ஜெர்மனியின் படைக்கலத் தொழிற்சாலைகள் மீதும், கிடங்குகள் மீதும், நீர்மூழ்கிக் கப்பற்றுறைகளின் மீதும், செய்தித்துறைச் சாதனங்கள் மீதும் குண்டு களைப் பொழிந்தன. ஜெர்மானியர்களால் ஓரிடத் திலிருந்து மற்றேரிடத்துக்கு நகரக்கூட முடியவில்லை. தளவாடங்களே உற்பத்தி செய்யவும் முடியவில்லை. இந்நிலையிலும் ஜெர்மானியர் மனந்தளராமல் இறுதிப் போர்புரிந்தனர்; பறக்கும் குண்டு (Flying bombs) களையும், ஆளில்லாத இராக்கெட் விமானங்களை (Rocket Aeroplanes)uļıh @filfisoTËģfisir Gunsb Erostů பெருஞ்சேதம் விளைவித்தனர். போர் முறையில் இத்தாக்குதல் பெரிய சாதனையே என்ருலும், காலங் கடந்த முயற்சியாகிவிட்டது. உருசியர்கள் ஜெர்மனியைக் கீழ்த்திசையில் தாக்கினர். தொழில் வளம் செறிந்த ரூர் பகுதி, நேசப்படையினர் ஆதிக்கத்தில் வந்தது. உருசியர் பெர்லினக் கைப்பற்றினர். முசோலினி கைது செய் யப்பட்டு, இத்தாலிய மக்களாலேயே கொல்லப்பட் டான். ஹிட்லரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/108&oldid=820507" இலிருந்து மீள்விக்கப்பட்டது