பக்கம்:பாரும் போரும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 O களுமின்றிப் பொதுவான அடிப்படையில் நடை பெறவேண்டும்; எல்லா நாட்டு மக்களுக்கும் விரும் பிய நாடுகளில் வாழக் குடியுரிமை (Citizen right) அளிக்கப்படல் வேண்டும்; ஒரு நாட்டிலிருந்து மற்ருெரு நாட்டிற்குள் நுழைய நுழைவுச் சீட்டு (Pass-port) வேண்டியதில்லை; ஒவ்வொரு நாடும் தங்கள் உள் நாட்டு அரசியலைக் கவனித்துக் கொள்ள ஒரு சட்டசபை அமைத்துக் கொள்ள லாம்; எல்லா நாடுகளுக்கும் பொதுவான பாராளு மன்றம் கூட்டவேண்டியதில்லை. எல்லா நாட்டு உறுப்பினர்களும் வேண்டும் பொழுது கூடி, பொது வான திட்டங்களைப்பற்றிக் கலந்து முடிவுக்கு வரலாம். “இத்தகைய கூட்டாட்சி முறையால் ஐரோப் பாக் கண்டத்தின் தொழில் வளம் பெருகும்; விளைவு மிகும்; பொருள் வளம் உயர்வடையும்; தொழிற் சாலைகளில் பெருவாரியாக உருவாக்கப்படும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பும் தேவையும் பெருகும். காரணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி களின்றிப் பரந்த ஐரோப்பாக் கண்டம் முழுவதும் அப்பொருள்களை விற்கலாமன்ருே? இவ்வாறு பொருள் வளத்தைப் பெருக்கிக் கொண்டால், வல் லரசுகளின் பொருளாதாரத் தாக்குதலிலிருந்து அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஆளாகாமலிருக்க முடியும். ஐரோப்பாவில் போரே நிகழாமலும் தடுக்க முடியும்.” இவர் கூறிய இவ்வறிவுரை ஐரோப்பாவிற்கு மட்டுமன்று. உலகத்தின் மற்றப்பகுதிகளுக்குந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/117&oldid=820516" இலிருந்து மீள்விக்கப்பட்டது