பக்கம்:பாரும் போரும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

மும், சேக்ஸ்பியர் எழுதியுள்ள ஜூலியசு சீசர், மாக் பெத் முதலிய உயர் நாடகங்களும், போரின் விளை வால் ஏற்படும் பெரும் உயிர்க் கொலைகளையும், அழிவுகளையுமே படலம் படலமாக, எதுகை இடரு மல், மோனே முறியாமல், அணியழகோடு எடுத் தியம்புகின்றன. உயிர்க்கொலை செய்வதில் வல்ல வீரன், வீரசுவர்க்கத்திற்குப் புலவர்களால் அனுப் பப்படுகிருன். அவ்வீரர்களின் புகழைப் பாடுவதை அந்நாட்டு மக்கள் தங்கள் கடமையாக எண்ணு கின்றனர்.

போரைப்பற்றி அறிஞர்கள் :

நாட்கள் செல்லச் செல்லப் போரைப் பற்றி, மக்கள் கொண்டிருந்த கொள்கை வலியுற்று வந்திருக் கிறதே யன்றிச் சிறிதேனும் நெகிழ்ந்து கொடுத்த தாகக் காணுேம்.

இன்றும் போர்வீரர்களின் புகழை, நாம் காது செவிடுபடும்படி உரக்கக் கேட்கிருேம். போரின் பண்புகள் கற்பனை யினிமையோடு, மக்களிடையே சிறப்பாகக் கூறப்படுகின்றன. நெருப்பில் புடம் போட்ட பொன் மாசு நீங்கிச் சுடர் பெறுவதுபோல, மடியும் அச்சமும் கொண்ட மக்கள், போரில்ை ஆற்றலும் ஆண்மையும் நாட்டுப் பற்றும் பெறுவ தாகச் சிலர் கூறுகின்றனர். போரிலே காட்டப் படும் உயர்ந்த வீரத்தையும், உள்ள முருக்கும் தியா கத்தையும், தங்கள் கூற்றுக்குச் சான்ருக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் மேற்கூறிய உயர் பண்புகட்குப் போரே பிறப்பிடம் என்றுகூட நினைக்கத்தோன்றும். போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/12&oldid=595523" இலிருந்து மீள்விக்கப்பட்டது