பக்கம்:பாரும் போரும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

யேற்ற நாடுகளை நிறுவ வேண்டும். பிறகு அந் நாடுகளுக்கு, நிலத்திலும் நீரிலும் இங்கிலாந்தின் வலிமையை வளர்ப்பதே உங்கள் முதல் நோக்கமா யிருக்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண் டிருக்க வேண்டும். :

ஆங்கிலப் படையில் எளிய போர்வீரனுக

இருந்து இறுதியில் தளபதி (Major General) யான ஒருவர் கூற்றைக் கேளுங்கள் :

“போரில் வெற்றியடைய மனமாரப் பொய் சொல்லவேண்டும்; புரட்டுச் செய்ய வேண்டும். அவ்வாறு எவன் செய்ய மறுக்கிருனே, அவன் தன் தோழர்களுக்கும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கும் இரண்டகம் செய்தவனுவான். அவனைக் கீழ்மகன் என்றும், பிணத்திற்குப் பிறந்த கோழை என்றும் கூறவேண்டும். அறம், மறம் பற்றிப் பேசுவதெல் லாம் பொருளற்ற வெறும் பேச்சு. பகைவன் மடியும் வரையில் அடிமேல் அடிகொடுக்க வேண்டியது தான் ஒரு நாட்டின் கடமையாகும்.”

மேற்கூறிய எடுத்துக் காட்டுகளால் ஆங்கிலே யர்கள் எவ்வளவு போர் வெறியர்களாகவும் பேராட்சி வெறியர்களாகவும் இருந்தார்களென்பது விளங்கும். ஆங்கிலேயர் மட்டுமல்ல; உலகத்தில் வாழ்ந்த மக்கள் இனமே போர் உணர்வை ஓர் இயல்பூக்க (Instinct) மாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறது.

இவ்வியல்பூக்கம் உலகை இதுகாறும் எப்படி எப்படி அலேக்கழித்தது? இவ்வியல்பூக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/14&oldid=595527" இலிருந்து மீள்விக்கப்பட்டது