பக்கம்:பாரும் போரும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழரும் போரும்

தமிழரின் போர்ப்பண்பு :

உலகில் போரியல் மக்கள் (Warlike people) என்று சிறப்பாகக் கூறப்படுபவர்கள் கிரேக்கர்களும் உரோமானியர்களுமே ஆவர். அவர்கட்கு இணே யான போர் உணர்வும், அஞ்சா நெஞ்சமும் படைத் தவர்கள் தமிழ் மக்கள். ஆனல் இச் செய்தி உலக வரலாற்றிலே மறைக்கப்பட்டதன் காரணம், தமிழ் மக்கள் வரலாற்று நூல் எழுதும் இயல்பூக்கத்தைப் பண்டை நாள் தொட்டுக் கைக் கொள்ளாமலிருந் ததுதான். கிருத்து பிறப்பதற்கு முன்னும் பின்னும் கிரேக்க நாட்டிலும் உரோம நாட்டிலும் வரலாற்று ஆசிரியர்கள் மலிந்திருந்தனர். அரித்தாத்தலும் (Aristotle) ĝ5Tsoufiluqúb (Ptolemy) f'ĠJả3, HTL 4-6b தலை சிறந்த வரலாற்று ஆசிரியர்களாகத் திகழ்ந்த பொழுது, தமிழகத்துப் புலவர்கள் இயற்கையின் எழிலைப் பாக்களில் வடித்து மகிழ்ந்தனர். உரோம நாட்டில் சிசேரோவும் சீசரும் மக்கள் மன்றத்தின் முன்னே நின்று அரசியல், பொருளியல், சமூக இயல் பற்றிச் சொன்மழை பொழிந்துகொண்டிருந்த பொழுது, தமிழ் நாட்டுப் பாவேந்தரெல்லாரும் மூவேந்தர் முன்னின்று பாமாலை பாடிக்கொண்டிருந் தனர். வயிற்றுத் தீத்தணியப் பழமரம் நாடும் பறவை போல் வள்ளல்களைத் தேடும் பணியே, அவர்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கொள்ளே கொண் டது. அதனுற்ருன், அவர்கள் தம்மை ஆதரித்த வள்ளல்களைப் பற்றி மட்டும் தனிப் பாடல்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/16&oldid=595531" இலிருந்து மீள்விக்கப்பட்டது