பக்கம்:பாரும் போரும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1

வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படும் சமுத்திரகுப் தனின் குதிரைக் குளம்பு, தமிழகத்தின் வட எல்லையை வட்டமிட்டதே யன்றி, ஊன்றி நிலைபேறு கொள்ளவில்லை. பார்புகழ, பரதகண்டமெங்கும் கொடிகட்டி ஆண்ட மொகலாயரின் போர் முரசு தமிழகத்தில் ஒலிக்கவில்லை. என்றும் தமிழர் சுயேச்சை விரும்பிகள். கா ர ண ம் அவர்கள் போராற்றலே.

எந்தக் குற்றச்சாட்டை வேண்டுமானுலும் தமிழர்கள் பொறுத்துக் கொள்வர். வீரமில்லாதவ னென்ருே, ஈகையில்லாதவனென்ருே கூறினல் எந்தத் தமிழனும் பொறுத்துக்கொள்ள மாட்டான். வீரமும், காதலும், ஈகையும் தமிழரின் தலையாய பண்புகள். இம் மூன்றின் அடிப்படையிலேயே த மி ழ் இலக்கியங்களெல்லாம் எழுந்துள்ளன. போரை ஒரு கலையாகக் கொண்டனர் தமிழர். வாழ்க்கையை அகம் புறம் என இரு கூருக்கி, அவற்றிற்கு இலக்கண இலக்கியம் படைத்து வாழ்ந்த பெருமை வேறு எந்நாட்டார்க்கும் இல்லா மல், தமிழர்க்கே வாய்த்த தனிச் சிறப்பாகும்.

போர்க் காரணங்கள் :

மண்ணுசை, மண்ணுள் வேந்தர்க்கு இயல்பான பண்பாகும். தங்கள் நாட்டின் எல்லையை விரிவு செய்து, பேரரசனுக வாழவேண்டுமென்று ஒவ் வொரு மன்னனும் விரும்பின்ை. எனவே தமிழக வேந்தர் இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்" போர் புரிந்தனர். போருக்கு மற்றுமோர் காரணம்

பா. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/18&oldid=595535" இலிருந்து மீள்விக்கப்பட்டது