பக்கம்:பாரும் போரும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2

வீரமும் ஆகும். புகழை விரும்பாத மனிதன் உல கில் இல்லை என்று சொல்லலாம். தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் ருேன் ருமை நன்று' என்பது வள்ளுவர் வாய்மொழி யன்ருே? எனவே ஒவ்வொரு மன்னனும், தன் வீரத்தையும் வலிமையையும் போர்க் களத்தில் நிலை நாட்டிப் பீடும் புகழும் பெற விரும்பின்ை. அப் பீடும் புகழும் புலவராற் சிறப்பித்துப் பாடப் பெறு தலையும் விரும்பின்ை. "புலவர் பாடும் புகழு டையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப', 'இசையுடையோர்க் கல்லது உயர்நிலை யுலகத்து உறையுள் இல்லை என்பவற்றில் அக் காலத்து மன்னர் பெரும் நம்பிக்கை கொண்டிருந் தனர் போலும். எனவே, "மைந்து பொருளாகவும்" பண்டைத் தமிழகத்தில் போர் நிகழ்ந்தது. ஒரு மன்னன் மற்ருெரு நாட்டு மன்னன் மகளை மணக்க விரும்பிப் பெண் கேட்டு மறுக்கப்பட்டால், அதன் காரணமாகவும் போர் நிகழுமென்று புறப்பொருள் வெண்பா மாலே கூறும். பாரி வேளுக்கும் மூவேந்தர் கட்கும் நடந்த போர் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். இம்மூன்றும் போர்க் காரணங்களாகத் தமிழ் நூல் கூரு நிற்கும்.

போர் முறைகள் :

தமிழரின் போர்முறைகள், அறிந்து மகிழ்தற் குரிய சிறப்புகளுடையன. தமிழரின் போர் முறை களைப் பற்றிக் கூறும் பழமையான நூல் தொல்காப் பியமாகும். அதற்குப் பின் எழுந்த பன்னிரு படலம் என்னும் இலக்கண நூல், விரிவாகவும் விளக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/19&oldid=595537" இலிருந்து மீள்விக்கப்பட்டது