பக்கம்:பாரும் போரும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

மாகவும் போரைப்பற்றிக் கூறிச் செல்கிறது. ஆனல் அந்நூல் முழுவதும் இப்பொழுது கிடைத்திலது. பன் ளிைருபடலத்தின் வழிநூலான புறப் பொருள்வெண்பா மாலை போரைப் பற்றி அறிதற்கு மிகவும் சிறந்த நூலாக இப்பொழுது விளங்குகிறது. -

தமிழர் போர்ச் செயலே எண்வகைத் திணை களாகப் பிரித்தனர். அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்பன. இவ்வெட்டும் பல துறைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இப் பிரிவுகளின் அடிப்படையிலேயே இலக்கியங்களும் எழுந்துள்ளன. இவை புறத்தில் அடங்கும். தமிழரின் போர்ச் செயல்களைக் கூறும் இலக்கியங்களில் தலே சிறந்ததாக விளங்கும் புற நானுறு என்னும் தொகை நூல், இத்திணைகளையும் துறைகளையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது. வெட்சி :

ஒரு நாட்டின் மன்னன் மற்ருெரு நாட்டின் மீது போர் தொடுக்கக் கருதினுல், அந்நாட்டில் வாழும் பார்ப்பனர் முதலியோரையும், பசு முதலியவற்றை யும் அந்நாட்டினின்றும் விலக்கல் வேண்டி, "நாம் போர் தொடுக்கப் போகின்ருேமாகலின், பசுவும், பசுவின் இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டி ரும் பிணியுடையீரும், நுமது குடியில் இறந்தோர்க் குச் செய்யக் கூடிய பிண்டோதகக் கிரியைகளைப் பண்ணும் பிள்ளைகளைப் பெருதீரும், நுமக்குப் பாது காப்பான இடங்களைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று பறையறைவிப்பான்.

  • புறநானூறு 9.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/20&oldid=595539" இலிருந்து மீள்விக்கப்பட்டது