பக்கம்:பாரும் போரும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

களுக்கும், கரிக்குருவியின் சொல்லாகிய நிமித்தத்தை அறிந்து சொன்ன கணிக்கும், ஆநிரையின் நிறைந்த பங்கைக் கொடுத்துப் பரம்பரையாகத் துடிகொட்டி வருபவனுக்கும் சிறப்புச் செய்து, வெற்றியை அளித்த துர்க்கையை வழிபடுவர். அவ்வீரர்களின் மனைவிய ராகிய மறத்தியர், வள்ளியின் வேடம் புனைந்து முருகபூசை பண்ணும் வேலனேடு வெறியாட்டு ஆடிமகிழ்வர். வெறியாட்டு, வள்ளிக் கூத்து என்றும் கூறப்படும். இவையனைத்தும் வெட்சியின்பாற்படும்.

கரந்தை :

தம் நாட்டின் பசுநிரை பகைவரால் கவர்ந்து செல்லப்பட்டதை, அரசன் ஆணையால் அறையப் படும் பறையில்ை வீரர்கள் அறிந்தவுடன், தாம் தாம் செய்துகொண்டிருந்த தொழிலை, இருந்த நிலை யிலேயே நிறுத்திவிட்டுக் கரந்தைப் பூவையாவது, அதலைாய மாலையையாவது சூடுவர். கரந்தை என் பது கொட்டைக்கரந்தை என்னும் பூடு. பின் வீரக் கழல் புனைந்து கொண்டு, வில்லையேந்திக் கூட்ட மாகக் கூடி, ஆநிரையைக் கைக்கொண்ட பகை வர் சென்ற வழியில் பெரு முழக்கத்தோடு சென்று அவரைச் சூழ்ந்து போர் புரிந்து ஆநிரையை மீட்டு வருவர்.

அவ்வீரருட் சிலர் முகத்திலும் மார்பிலும் பட்ட புண்களுடன் வருவர். சிலர் தம் புகழை நிலை நிறுத்தி விட்டுப் போரிலே உயிர் நீப்பர். ஆநிரையை மீட்டுக்கொள்ளும் ஆற்றலின்றிக் கரந்தையர் மீண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/22&oldid=595543" இலிருந்து மீள்விக்கப்பட்டது