பக்கம்:பாரும் போரும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

செல்லுதலும் உண்டு. அப்பொழுது ஒரு வீரன் தனியே நின்று, போர்க்கருவிகளால் தன்மேல் புண் உண்டாதலே விரும்பிக் கூத்தாடிப் பகைவரைக் கொன்று, அவர்களுடைய குடரை மாலையாகச் சூட்டித் தன் வேலைச் சுழற்றி ஆடுவான்.

ஆநிரை மீட்கும் போரில் இறந்து பட்ட வீரர் களைப் பாணர் புகழ்ந்து அவர்கட்காக இரங்குவர். வெற்றிகொண்ட மறவர், தம் மேம்பாட்டை அரச னிடத்தே எடுத்துக்கூறி மகிழ்வர். தீய அறிகுறிகள் தென்படுவதையும் பொருட்படுத்தாமல், பகைவர் மேல் சென்று பொருது வெற்றி பெற்ற வீரர்களுக்கு வயல் முதலிய வரிசைகளை அரசன் வழங்குவான்.

மறவர்கள் தம் அரசனைப் புகழ்வர். இம்மறக் குடியினர் உலகம் உண்டான காலமுதற்கொண்டு வீரத்தோடு தோன்றி விளங்குபவர்களென்று பாண ரால் புகழப்படுவர். இவையனைத்தும் கரந்தைத் திணையுள் அடங்கும். -

வஞ்சி :

வெட்சி சூடிப் பகைப்புலத்தில் ஆநிரை கவர்ந்த மன்னன் பிறகு பகைவர் நாட்டின்மேல் படை யெடுத்துச் செல்வான். அவன் வீரர்கள் முரசை முழக்குவர். யானே முதலியன முழங்கும். மன்னன் தன் குடையையும் வாளேயும் நல்ல நாளில் தனக்கு முன்னே செல்லவிடுப்பான். அக்காலத்தில் அரச னுக்கு வெற்றியுண்டாகும் பொருட்டு, வீரர் துர்க் கையை வழிபடுவர்; பிறகு படை வகுப்பில் தத் தமக்கு ஏற்ற நிலையை மேற்கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/23&oldid=595545" இலிருந்து மீள்விக்கப்பட்டது