பக்கம்:பாரும் போரும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

நெறிக்குப் புறம்பான செயலாகவும் கருதுவர். போரில் புறமுதுகிடுவதால் உண்டாகும் புறப் புண் ணுக்காக நாணி வடக்கிருந்து, உணவையும் உண்ணிரையும் நீக்கி உயிர் விடுவர்.

சோழன் கரிகாற் பெருவளத்தானும் சேரமான் பெருஞ்சேரலாதனும் போரிட்டபோது, புறப்புண் நாணிச் சேரமான் வடக்கிருந்ததாக வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பட்ட பாடல் ஒன்று புற நானுற்றில் காணப்படுகிறது. சேரமான் வடக்கிருந்த போது கழாத் தலையார் என்னும் புலவர்,

"தன்போல் வேந்தன் முன்புகுறித்தெறிந்த

புறப்புண் காணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தனன்!"என்று பாடியுள்ளதும் நோக்கற்பாலது.

பகையரசர் திறை கொடுத்துப் பணிந்து பகைமை நீங்கிய பின்னரும், சில காலம் அரசன் பாசறையில் இருத்தல் உண்டு. சில அரசர் முதன் முறை தீயிட்ட பின்னரும் தம்மைப் பணியாத பகைவர்களது நாட்டில் மீண்டும் தீயிடுவர். படை வீரர்களுக்குப் போர்க்களத்திலேயே பெறும்படி உணவைத் தருதல் அரசர் வழக்கம். பகைவரது நாட்டின் மேற் படை யெடுத்துச் சென்று தங்கிய பின்பும், அரசர்கள் சினம் தணியாமல் இருத்தல் உண்டு. அக்காலத்தில் பகை வர் நாடு அழிதலை எண்ணிச் சிலர் இரங்குவர். இச் செயல்கள் யாவும் வஞ்சியுள் அடங்கும்.

  • புறநானூறு, 65
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/25&oldid=595549" இலிருந்து மீள்விக்கப்பட்டது