பக்கம்:பாரும் போரும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 காஞ்சி :

பகையரசன் தன் நாட்டின் பிறத்தே LJ60)- 45 ளுடன் தங்கியிருத்தலை அறிந்த ஓர் அரசன், முரசை முழக்கித் தன் வீரர்களைத் திரட்டிக்கொண்டு எழுந்து, பகைவர் படை தன் நாட்டெல்லேயுட் புகாதபடி வழி களைப் பாதுகாத்து நிற்பான். வீரர்களிற் சிறந்தவர் களுக்கு அரசன் படைக்கலங்களே வழங்குவான். அவற்றைப் பெற்ற வீரர் மகிழ்ந்து, தங்கள் ஆற்றலைப் போரில் புலப்படுத்துவர். பகையரசனின் அறை கூவலே ஏற்க இம்மன்னன் தன் வீரரோடு காஞ்சிப் பூவையோ அல்லது மாலையையோ சூடுவான். வாளே யும் குடையையும் நல்ல வேளையில் முன்பு செல்ல விட்டு, வஞ்சின மொழிகள் பகர்வான்.

பூதப்பாண்டியனைப் பகை மன்னர் பலர் கூடி ஒல்லையூர் என்ற இடத்தில் எதிர்த்தனர். ஒல்லையூர் என்பது இப்பொழுது சோழ நாட்டில் ஒலியமங்கலம் என்ற பெயரோடு விளங்குகிறது. அப்போது பூதப் பாண்டியன், “என் மாற்ருரை அலறத் தாக்கித் தேரோடு அவர்களைப் புறங்காணேனுயின், பெரிய அமர்த்த மையுண்ட கண்களையுடைய என் மனைவி யைப் பிரிவேனுகுக. அறம் திறம்பாத அவைக்களத் தில், நீதியின் திறம் அறியா ஒருவனே வைத்து, முறை கலங்கிய கொடுங்கோல் செய்தேனுகுக. மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் ஆகிய என் கழிபெரும் நண்பரின் கேண்மையை இழப் பேணுகுக. உயர்ந்த பாண்டியர் குடி பபிறப்பை நீங்கிப் பிறர் வன்புலம் காக்கும் காவற் கண்ணே பிறப்பேனுகுக' என்று கூறுகின்றன்.

  • புறநானூறு 71.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/26&oldid=595551" இலிருந்து மீள்விக்கப்பட்டது