பக்கம்:பாரும் போரும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O

பாண்டியன் நெடுஞ்செழியனைச் சோழன், சேரன் ஆகிய முடியுடைப் பெருவேந்தர் இருவரும், எருமையூரன் முதலிய வேளிர் ஐவரும் ஒருங்கு கூடித் தலையாலங்கானம் என்ற இடத்தில் எதிர்த் தனர். அப்போது பாண்டியன், .

“என்மீது போருக்கு வந்துள்ள, புல்லிய சொற் களைக் கூறிய வேந்தர்களைப் போரிலே சிதறடித்து அவர்களைப் புறங் காணேனுயின், என் குடி மக்கள் என்னைக் கொடியவன் என்றும் கொடுங்கோலன் என்றும் தூற்றுவராக. மாங்குடி மருதன் முதலான தலைசிறந்த புலவர் என்னைப் புகழாமற் போக-என் கேளிர் துயரம் அடைய இரப்பவர்க்குக் கொடாத வறுமையை யான் அடைவேகை " என்று வஞ் சினம் கூறுகின்ருன்.

சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் ஏற்பட்ட பொழுது நலங்கிள்ளி,

"என் உள்ளத்தை இகழ்ந்த பகைவனே, மூங் கிலேத் தின்னும் வலிய யானையின் காலில் கீழகப் பட்ட மூங்கில் முளையை ஒப்பப் பொருது சிதைக்கா விடின் அன்பில்லாத பொதுப் பெண்டிர் கூட்டுறவு பெற்றேனுகுக" என்று வஞ் சி ன ம் பகர்கின் ருன். மேற் கூறியவை வஞ்சினக் காஞ்சியின் பாற்படும்.

பகைவர்களே எதிர்த்த காலத்தில் இறந்த வீரனு டைய தலையைச் சிலர் சிறப்பித்துப் புகழ்வர்; அத்தலை யைக் கொண்டு வருபவர்களுக்கு அரசன் பரிசில்

  • புறநானூறு, 72 t புறநானூறு 73
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/27&oldid=595553" இலிருந்து மீள்விக்கப்பட்டது