பக்கம்:பாரும் போரும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

யார் என இரக்கப்படுவர். யானே குதிரை முதலியன போரில் தத்தம் ஆற்றலே வெளிப்படுத்தி நிற்கும்.

போர் புரியுங்காலத்தில் தனியே நின்ற அர சனைப் பகையரசர் பலர் சூழ்ந்துகொள்ள அங்கே யுள்ள தனி வீரனுெருவன் வீரத்தோடு போரிட்டு அவர்களை வெல்வதுண்டு. அரசனது தேர் உதிர வெள்ளத்தில், பகைவருடைய பிணங்களின் மேல் ஊர்ந்துவரும். போரில் யானையை எறிந்து இறந்து பட்ட வீரரைக் குறித்துப் பாணர் நெருப்பை மூட்டிச் சாப்பண்ணுகிய விளரியைப் பாடுவர். போரில் இரு திறத்துப் படைகளும் அரசர்களும் முற்ற அழிவது முண்டு.

தம் சேனே புறமுதுகிட்டு ஒடும்போது வீரர் சிலர் அதன்பின்னே நின்று, தொலைவில்வரும் பகை வரோடு போர் புரிவர். சிலர் தம் கையிலுள்ள வேல் களே யானைமேல் எறிந்து படைக்கலமின்றி நின்ற பொழுதும், தம் தோளேயே கொம்பாகக் கொண்டு ஆண் எருமையைப் போல் எதிர்த்து வெற்றி கொள் வர். சிலர் பகைவரைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுவர். சிலர் தம்மேல் தைத்த வேலைப் பறித்து, அதனையே கொண்டு பகைவரோடு போர் செய்வர். இது நூலிலாட்டு எனப்படும். “கைவேல் களிற்ருெடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்'-என்ற குறள் இதற்குச் சிறந்த இலக்கியமாகும். -

வெற்றி பெற்ற வேந்தனது தேரின் முன் வீரர்

கள் ஆடுவார்கள். அதன்பின் விறலியர்களும் ஆடு வார்கள். மன்னனுேடு வாள் வீரர் முழங்கி ஆடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/31&oldid=595561" இலிருந்து மீள்விக்கப்பட்டது