பக்கம்:பாரும் போரும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கண்கள் சினக் குறிப்பின்றி உறங்குகின்றன’ என அவன் து யி லே ச் சிறப்பித்துச் சிலர் பாராட்டுவர்.

படைக் கருவிகள் :

பண்டைத் தமிழர் பலதிறப்பட்ட படைக்கலங் களைப் போரில் பயன்படுத்தினர். அவை இரும்பாலும் செம்பாலும் செய்யப்பட்டவை. அவை அடார், அம்பு, அரம், அரிவாள், எஃகு, கண்ணுடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கர்லெஃகம், குந்தாலி, குறடு, கேடகம், கோடரி, சக்கரம், சிறி யிலை, எஃகம், தறிகை, நவியம், படைவாள், பூண் கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேல் முதலியன. அவை அடிக்கடி சாணை பிடிக்கப் பட்டுத் துருப் பிடிக்காமலிருக்க நெய் பூசப்பட்டு மயிற்பீலி அணி யப்பட்டு, அணிபெறப் படைக்கலக் கொட்டிலில் வைக்கப்பெறும். அரண்கள் :

வானத்தையளாவிய அரண்கள் கற்களால் கட்டப்பட்டன. அதன் வாயில்கள், யானை தம் அம் பாரியோடு சென்ருலும், தடை செய்யாத அளவு உயர்ந்திருந்தன. அவ்வாயில்களை அடைக்க மரத் திற்ைசெய்யப்பட்ட பெருங் கதவுகள் பொருத்தப் பட்டிருந்தன. அக்கதவுகள் சிற்ப வேலைப்பாட்டோடு கூடி அழகுடன் விளங்கின. அக்கதவுகளை உள்ளி ருந்து தாங்க உரமான கணைய மரங்கள் பொருத்தப் பட்டிருந்தன. கோட்டை மதிற் புறத்தே அகன்ற ஆழமான அகழி உண்டு. அவ்வகழிகளில் கராம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/33&oldid=595565" இலிருந்து மீள்விக்கப்பட்டது