பக்கம்:பாரும் போரும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

எல்லேயில் வைக்கப்பட்டிருந்த படை பாண்டிப்படை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. காவற் படை (Garrisons) வைத்திருந்தனர். உள்நாட்டுப் படை வீடுகள் (Cantonments) கடகம் என்ற பெய ரால் அழைக்கப்பட்டன.

இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன்பிருந்தே தமிழ் மன்னர்கள் கப்பற்படை வைத்திருந்தனர். கப்பலைக் குறிப்பிடக் கலம், நாவாய் என்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் ம லி ந் து காணப்படுகின்றன. எனவே, தமிழகத்தில் கப்பற்படையின் தொன்மை விளங்கும். நேவி (Navy) என்ற ஆங்கிலச் சொல் தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பதிலிருந்து பெறப் பட்டதாகும். பருவக் காற்றின் திறமறிந்து கலம் செலுத்தியவர் உரோமானியரே என்பர் மேலைநாட்டு வரலாற்ருசிரியர். அக்கூற்று பிழைபட்ட தாகும். *நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளிதொழிலாண்ட உரவோன் மருக' என்ற வெண்ணிக் குயத்தியாரின் புறப்பாட்டால் கரிகாலன் முன்னேர் காற்றின் வகை தெரிந்து கலம் செலுத்திய வரலாறு விளங்கும். சேர மன்னனை நெடுஞ்சேரலாதன் கப்பற்படையின் துணைகொண்டு மேற்கடலில் இருந்த தீவுகளின்மேற் படையெடுத்துச் சென்று கடம்பெறிந்தான் என்ற வரலாறு, கிரேக்க ஆசிரியரான தாலமியின் குறிப்பு களில் காணக் கிடக்கிறது. பதிற்றுப்பத்தும் இதை வலியுறுத்தும்.

இராசராச சோழன் கப்பற்படையின் துணை கொண்டு ஈழத்தையும், மாலத்தீவுகளையும் (Maladive Isles) வென்றன். அவன் மகனுன இராசேந்திரன்

  • புறநானூறு 66.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/36&oldid=595571" இலிருந்து மீள்விக்கப்பட்டது