பக்கம்:பாரும் போரும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O

ரீவிஜயம், கடாரம், நக்கவாரத் தீவுகள் முதலிய வற்றை வென்ருன். காந்தளுர்ச்சாலை என்ற சேர நாட்டுக் கடல் துறைப்பட்டினத்தில் சோழர்களின் கப்பற்படை யொன்று இருந்தது.

மகளிர் வீரம் :

ஆடவர்கட் கொப்பத் தமிழ் மகளிரும் வீர உணர்வு பெற்று விளங்கினர்; அளவற்ற நாட்டுப் பற்றும் மானஉணர்ச்சியும் கொண்டிருந்தனர்; சிறந்த வீரர்களைத் தமக்குரிய கணவராகப் பெறப் பெரிதும் விழைந்தனர்; புலியைக் கொன்று அதன் பல்லைத் தாலியாக அணிவிக்கும் காளையைப் பெரி தும் விரும்பினர். பண்டைத் தமிழகத்தில் ஏறுதழுவல் என்னும் வீர விளையாட்டு சிறப்பாகப் போற்றப்பட்டு வந்தது. பருவமடைந்த ஒரு பெண்ணுேடு ஒரு முரட்டுக் காளையையும் பெற்றேர் வளர்ப்பர்; அம் முரட்டுக் காளையை அடக்கும் வீரனுக்கே தம் மகளை மணமுடித்து வைப்பர். முல்லை நிலக் கடவுளான திருமால்கூடத் தன் காதலியான நப்பின்னையை ஏறுதழுவி மணந்ததாகக் கூறுவர்.

முதல் நாள் போரில் தமையனையும், இரண்டாம் நாட்போரில் கொழுநனயும் இழந்த ஒரு மறப்பெண், மூன்ரும் நாள் போர்ப்பறையின் ஒலிகேட்டுப் பால் மணம் மாருத் தன் ஒரே மகனைப் பாறுமயிர்க் குடுமி எண்ணெயிட்டு நீவி, வெள்ளுடை விரித்துடுத்தி, வேலைக் கையில் கொடுத்துப் போர்க்களம் நோக்கி அனுப்பிய வீர வரலாறு, ஒக்கூர் மாசாத்தியாரின் புறப்பாட்டில் விரித்துரைக்கப் படுகிறது. காவற் பெண்டு என்ற மற்ருேர் பெண்பாற் புலவர் வீரமகனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/37&oldid=595573" இலிருந்து மீள்விக்கப்பட்டது