பக்கம்:பாரும் போரும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 |

யீன்ற தம் வயிற்றைப் "புலி வாழ்ந்து போகிய கல்லளே’க்கு ஒப்பிட்டுப் பெருமைப்படுகின்ருர்.

மற்ருெரு மறத்தி, தன் மகன் போரில் புறப்புண் பட்டு இறந்தான் என்று கேட்டு, அவன் செயலுக் காக வெட்கி, “இஃது உண்மையாயின் அவனுக் குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன்" என்று வஞ்சினம் கூறிப் போர்க்களம் புகுந்தாள்.

போர்க்களத்தில் கணவர் உயிர் நீங்கில்ை, அவர் பட்ட வேலால் தாங்களும் உயிர் விடுப்பர் சில மகளிர். சிலர் தீப்பாய்ந்து இறத்தலும் உண்டு. வேறு சிலர் போரில் பட்ட தம் கணவரின் வீரத்திற்கு அறிகுறியாக நாட்டப்பட்ட நடுகல்லுக்கு நாள் தோறும் வழிபாடு நிகழ்த்தித் தம் எஞ்சிய வாழ்நாட் களைக் கழிப்பர்.

எனவே மேற்கூறிய செய்திகளிலிருந்து, தமிழ்க் குடியின் வீரமும், அஞ்சாமையும், போர்ப்பண்பும் விளங்கும். இன்னும் சுருக்கமாகச் சொன்னல் தமிழ் நாட்டு ஆண் மக்கள், தங்கள் வாழ்வின் குறிக் கோளாகவும், கடமையாகவும் போர் செய்தலைக் கருதினர்.

ஆல்ை, கிரேக்கர்களைப்போலவோ உரோமானி யர்களைப் போலவோ தமிழர் என்றும் பேராட்சி வெறியராக (imperialists) இருந்ததில்லை. கரிகாலன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன், இராசேந்திரன் போன்ருரின் வடநாட்டுப் படை யெடுப்புகள், தங்கள் பெருமையை நிலைநாட்டுவ தற்காக மேற்கொள்ளப் பட்டனவேயன்றிப் பிறர் நாட்டைக் கவர்ந்து அடக்கியாள்வதற்காக அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/38&oldid=595575" இலிருந்து மீள்விக்கப்பட்டது