பக்கம்:பாரும் போரும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. போரியல் மக்கள்

கிரேக்கர்கள் :

கிரேக்கம் (Greece) என்ற சொல் மேலே நாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க தாகும். கிரேக்கர்களைத் தங்கள் மூதாதையர் என்று கூறிக் கொள்வதில் மேலைநாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்கிருன். வீரம், கலை,இலக் கியம், தத்துவம் முதலியவற்றை மேலே நாடுகளுக்கு வாரிவழங்கி, மங்காப்புகழ்கொண்டது கிரேக்கநாடு. மக்களாட்சிமுறையைஉலகுக்குவகுத்துக்கொடுத்து, “மக்களாட்சியின் தந்தை' என்ற பெயருக்கு உரிமை கொண்டதும் கிரேக்கமே. கிரேக்கம் என்ற சொல் நம் செவியில் விழுந்ததும், இன்றைய விஞ்ஞான உலகம் நம் உள்ளத்தினின்றும் மறைந்து விடுகிறது. திராய் நகரின் மேல் மாடத்தில், அமரகவி ஹோமரின் அழகோவியமான இலியாதின் தலைவியும், அழகிற்கு ஓர் எல்லேக் கல் என்று மேலைநாட்டுக் கவிஞர்களால் போற்றிப் புகழப்படுபவளுமான ஹெலன், யாழையும் குழலையும் வெறுக்கச்செய்யும் தன் தீங்குரலால் இன்னிசை எழுப்பிக் காந்தள் மலர் போன்ற தன் மென் சுரத்தால்இசைக்கருவியை மீட்டித்தென்றலில் மெல்லென அசைந்தாடும் மலர்க்கொடிபோல் காட்சி யளிக்கிருள். திராய் நகரத்தோடு கிரேக்கநாட்டின் மாபெரும் வீரர்களின் அழிவுக்குக் காரணமாக விளங்கிய அவள் ஒப்பற்ற அழகைக் கண்டு வியந்த வண்ணம் நாம் இருக்கிருேம். ஹோமரின் இலியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/39&oldid=595577" இலிருந்து மீள்விக்கப்பட்டது