பக்கம்:பாரும் போரும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

லிருந்து பெறப்பட்டதாகும். பண்டைக்கிரேக்க நாட் டில் இப்போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. கிரேக்க உலகில் வாழ்ந்த எல்லா வீரர்களும் இதில் பங்கு கொண்டனர். பாரின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இப்போட்டியைக் காண விரைந்தனர். மேலும் இவ்விழா சிதறுண்டிருந்த கிரேக்க மக்களின் ஒற்றுமை வளர்ச்சிக்கும் நாட்டுப் பற்று மறுமலர்ச்சியடைவதற்கும் பெரிதும் உதவியது.

கிரேக்கர்கள் சிறந்த கோட்டைகளும், அரண் களும் கட்டி வாழ்ந்தனர். திராய் நகர்க் கோட்டை யானது பன்னிரண்டு ஆண்டு முற்றுகைக்கும் தலை குனியாமல் வீறுகொண்டு நிமிர்ந்து நின்றது என்று 'இலியாது’ கூறும். அக்கோட்டையைப் புதை பொருள் ஆராய்ச்சியாளரில் ஒருவரும், ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவருமான என்ரிச் ஸ்கி.கிமன் என் பார் நிலத்தைத் தோண்டிக் கண்டறிந்து, உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். ஹோமரால் இலியாதில் அது எவ்வாறு சிறப்புறக் கூறப்பட்டுள்ளதோ அவ் வண்ணமே அது எழிலோடும், இகல் வேந்தரால் எய்தற்கரிய வன்மையோடும் விளங்குகிறது. கிரேக்க வீரர்கள் வில்லும், வேலும், வாளும், கோடரியும் தங்கட்குரிய சிறந்த படைக் கலன் களாகக் கொண்டிருந்தனர். அவை பெரும்பாலும் வெண்கலத்தால் செய்யப்பட்டவை.

கிரேக்கர்கள் கலஞ்செலுத்துவதில் வல்லுநர்கள். மத்தியதரைக் கடலில் அவர்களின் கப்பற்படையரசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/43&oldid=595585" இலிருந்து மீள்விக்கப்பட்டது