பக்கம்:பாரும் போரும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

தனியரசு செலுத்தினள். அவர்கள் கப்பற்படையின் பெருமைக்கு ஹோமரின் இலியாது சிறந்த சான்று பகர்கிறது. கப்பற்படையின் அணிவகுப்பைப்பற்றிய ஹோமரின் வருணனை (Episode) அக்காவியத்திற்கு ஒரு தலைமணி போன்றதாகும்.

கிரேக்க மக்களின் மறப்பண்பைப் பற்றிப் பேசும் போது, ஸ்பார்ட்டா நகர வீரர்கள் தர்மாப்பைலி என்ற இடத்தில் விளைத்த வீரச் செயலைக் குறிப்பிடா மலிருக்க முடியவில்லை. கி. மு. நான்காம் நூற்ருண் டில் பாரசீகம் மாபெரும் வல்லரசாக விளங்கியது. சிற்ருசியாவிலிருந்து சிந்து நதிவரையில் அது பரவி யிருந்தது. எகிப்து கூட அப் பேரரசில் அடங்கி யிருந்தது. ஆனல், கிரேக்கத் தாயகத்தின் ஒரு சிறிய புழுதி மண்ணைக்கூட அப்பேரரசால் கைப்பற்ற முடியவில்லை.

ஸெர்க்சிஸ் என்பவன் புகழ்மிக்க பாரசீக வேந் தன். தன் மூதாதையால் வெற்றி கொள்ள முடியாத கிரேக்க நாட்டை எவ்வாறேனும் தன்னடிப்படுத்த வேண்டுமென்று அவன் பேராவல் கொண்டான் : மாபெரும் படைதிரட்டிக் கொண்டு சிற்ருசியா வழி யாகச் சென்ருன் ; டார்டனல்ஸ் கடலினேக் (அக் காலத்தில் ஹெல்லஸ்பாண்ட் அல்லது கிரேக்கக் கடல் என்று அழைக்கப்பட்டது) கால்வாயைக் கடந்து ஐரோப்பாவிற்குள் புகுந்தான் ; இக்கால் வாயைக் கடக்க ஒரு பெரிய பாலம் அமைக்கப்பட் டது. இக்கால்வாயின் வழியாகத் தன் படை அணி வகுத்துச் சென்ற காட்சியை, அருகிலிருந்த குன்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/44&oldid=595587" இலிருந்து மீள்விக்கப்பட்டது