பக்கம்:பாரும் போரும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

உச்சியில் சலவைக் கல்லால் செய்யப்பட்ட அரியணை யில் வீற்றிருந்த அம்மன்னன் பார்த்தான். கிரேக்கக் கடலில் தன் கப்பல்கள் மொய்த்து நிற்பதையும், கடற்கரையிலும் சமவெளியிலும் தன் போர் வீரர்கள் மொய்த்து நிற்பதையும் கண்டு அவன் பெருமிதமும், பூரிப்பும் கொண்டான்.

இம்மாபெரும் படைவெள்ளத்தைக் கண்ட சிறிய தொகையினராகிய கிரேக்கர்கள் செய்வதறியாது திகைத்தனர். கிரேக்கப் படை பின்வாங்கிச் சென்று, பாரசீகப் படையைத் தர்மாப்பைலி என்ற இடத்தில் தடுத்து நிறுத்த முயன்றது. ஒரு பக்கத்தில் மலேயும், மற்ருெரு பக்கத்தில் கடலும் உடைய குறுகலான வழி இது. ஆகவே ஒரு சிலர் கூடப் பெருஞ் சேனையை இவ்விடத்தில் எதிர்த்து நிற்கலாம். பார சீகப் படையை எதிர்ப்பதற்கு லியோனிடஸ் என் பானைத் தலைவனுகக் கொண்ட முந்நூறு கிரேக்க வீரர்களடங்கிய சிறுபடை ஒன்று அனுப்பப்பட்டது. அஞ்சா நெஞ்சும், அசைவற்ற ஊக்கமும் கொண்ட அவ்வீரர்கள் தங்கள் நாட்டின் தலை விதியை முடிவு செய்ய வேண்டிய அந்நாளில் போற்றற்குரிய நாட்டுப் பற்றையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர். ஒருவர்பின் ஒருவராக அப்பெரும்படையை எதிர்த்து மாண்டனர். பாரசீகச் சேனை முன்னேறிச் செல்ல முடியவில்லை. முந்நூறு பேரும் இறந்த பிறகே செல்ல முடிந்தது. தர்மாப்பைலிக்கு நாம் இன்று சென்ருல் கூட அங்குக் கல்லில் பொறித் திருக்கும் கீழ் வரும் செய்தியைக் கண்டு கண்கலங்கி நிற்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/45&oldid=595589" இலிருந்து மீள்விக்கப்பட்டது