பக்கம்:பாரும் போரும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

“இவ்வழியே போகும் நீங்கள் ஸ்பார்ட்டா நகருக்குச் சென்று, தாயகத்தைக் காப்பதற்காக எங்கள் கடமையை ஆற்றி, நாங்கள் இங்கு இறந்து பட்ட செய்தியை அங்குள்ளவர்களுக்குச் சொல்லுங்கள் !"

உரோமானியர் :

கிரேக்க நாடானது, சிறந்த நாகரிகத்தையும், கலையையும், அரசியல் முறையையும் உரோமானியர் களுக்கு வழங்கிச் சிறப்புற்றது என்று கூறலாமே தவிர, ஒரு பேரரசை நிறுவிக் கட்டியாண்டது என்று கூறுவதற்கில்லே. கிரேக்க மக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்குள்ளேயே போரு டற்றிப் பேரரசை நிறுவும் ஆசையற்றுக் கிடந் தனர். பேராட்சி வெறிகொண்டு, உலகம் முழுவ தும் வென்று ஒரு குடைக் கீழ் ஆளவேண்டும் என்ற பேரவாவால் உந்தப்பட்டு, மார்தட்டிக் கிளம்பிய அலெக்ஸாந்தர் தன் ஆசை நிறை வேறுமுன் முப்பத்து மூன்ரும் வயதிலேயே உயிர் துறந்தான். ஆல்ை, உரோமாபுரி ஒரு பேரரசை நிறுவி உலக அரசி என்ற பெருமைக்கு உரிமை பெற். றது. இன்றைய இத்தாலியே உரோம நாடாகும். அதில் சிறப்புற்று விளங்கும் உரோம் நகரமே, உலகத்தை நடுங்க வைத்த மாவீரர்களைப் பெற். றெடுத்த உரோமாபுரியாகும். உலகம் என்று அக் கால மேலே நாட்டு மக்களால் எண்ணப்பட்ட நிலப் பகுதிகள் எங்கணும், உரோமானியர்களின் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. அவர் களின் போர் முழக்கம் எங்கும் எதிரொலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/46&oldid=595591" இலிருந்து மீள்விக்கப்பட்டது