பக்கம்:பாரும் போரும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கிளேடியேட்டர்கள் (Gladiators) என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் கூட்டமாக அரசன் முன் னிலையில் நின்று, வாளால் ஒருவரை யொருவர் தாக்கிப் போரிட்டுச் செத்து மடிவர். அதைக் கண்டு மன்னன் மகிழ்வான்.

கொடுங்கோன்மைக்கும் இரக்கமற்ற தன்மைக் கும் பெயர்பெற்ற நீரோ என்ற மன்னன் ஒரு சமயம் எரியில் மூழ்கிய உரோமாபுரியில் மக்கள் ஓலமிட்டோ டிய அவலக் காட்சியை, அரண்மனையின் மேன் மாடியில் நின்று கண்ணுரக் கண்டு மகிழ்ந்ததோடு, கின்னரத்தை (Fiddle) மீட்டி இன்னிசை எழுப்பின ம்ை. இரேன் என்ற ஒரு பெண், பட்ட மேறுவதற் காகப் பெற்ற மகனையே கொன்றெழித்தாள். இச் செயல்கள் யாவும் உரோமானியரின் இரத்தவெறிக் குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்.

இன்று ஐரோப்பாக் கண்டத்தில் வாழும் எல்லா நாட்டு மக்களும், உரோமானியரின் வழிவந் தவராகத் தங்களைப் பெருமையோடு கூறிக்கொள்கி ருர்கள். அரசியற் சட்ட அமைப்புத் துறையில் உரோமானியர் உலக மக்கள் எல்லாருக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றனர். இன்றுகூட மேல் நாடுகளில் சட்டக்கல்வி பயில்வோர், உரோ மானியச் சட்டம் (Roman Law) பயிலவேண்டும். உலகத்தில் வாழ்ந்த எந்த இனமும் ஒரு சில நூற் ருண்டுகளுக்கு மேல் ஒரு பேரரசைக் கட்டியாண்ட தாக வரலாறு கிடையாது. பல மாறுதல்களுக்கும், வீழ்ச்சிகட்கும் இலக்காகி இருந்தாலும், உரோமப் பேரரசு என்னும் விண்மீன் உலக சரித்திர வானில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/49&oldid=595597" இலிருந்து மீள்விக்கப்பட்டது