பக்கம்:பாரும் போரும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மா. இராசமாணிக்கம், M.A.I.T., M.O.L., Ph D., தமிழ்ப் பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர்

தியாகராயர் கல்லூரி, மதுரை.

36, மஞ்சனக் காரத் தெரு, மதுரை, 31-11-1958.

முகவுரை

" பாரும் போரும் என்னும் பெயர் கொண்டு விளங்கும் இந்நூல், தோற்றுவாய், தமிழரும் போரும், போரியல் மக்கள், போர் வெறியர்கள், உலகப் போர்கள், போரைத் தடுக்க வழி என்னும் ஆறு பகுதிகளேக் கொண்டது.

சங்ககாலத் தமிழருடைய போர்முறைகள் விரி வாகவும்,தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. கிரேக்கர், அராபியர், மங்கோலியர் முதலியவர் போர்த்திறங்கள் விளக்கப்பட்டுள்ளன. அலெக்சாந்தர், ஜூலியஸ் சீசர் முதலிய பேரரசர்களின் போர் வெறி நன்கு காட்டப்பட்டுள்ளது. உலகப் பெரும்போர்கள் உலகத்துக்கு உண்டாக்கிய அழிவுகள் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் போரைத் தடுக்கச் சிறந்த யோசனை கூறப்பட்டுள்ளது.

இந்நூல் உயர்வகுப்பு மாணவர்க்கு ஏற்றமுறை யில் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. பள்ளியுலகில் இத்தகைய நூல் இதுகாறும் வெளிவந்ததில்லை. இதனை மாணவர் உலகம் நன்கு வரவேற்கும் ன நம்புகிறேன். இப்புது முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட ஆசிரியர்க்கு என் வாழ்த்து உரியது.

மா. இராசமாணிக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/5&oldid=595509" இலிருந்து மீள்விக்கப்பட்டது