பக்கம்:பாரும் போரும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

மேற்குக் கரையிலுள்ள அட்லாண்டிக் மாகடலை அடைந்தான். கடல் குறுக்கிடக் கண்டு ஏமாற்றம் கொண்டு, குதிரை மீதமர்ந்தபடியே கடல் நீரில் சென்று, அல்லாவின் பேரால் வெற்றிகொள்ள அத் திசையில் நிலமில்லையே என்று வருந்தினுைம்.

ஆப்பிரிக்காவையும் ஐரோப்பியப் பெருநிலத் தையும் பிரிக்கும் கடலிணைக் கால்வாயைக் கடந்து ஸ்பெயின் நாட்டினையும் அராபியர் வெற்றி கொண்ட னர். அக்கால்வாயைக் கடந்த படைத்தலைவன் பெய ரான ஜபல்-உத்-தரீக் என்பதே இன்று ஜிப்ரால்டர் என்று மருவி வழங்குகிறது. பிறகு அராபியர் தென் பிரான்சிலும் நுழைந்தனர் ; ஐரோப்பாவை இருபுறங் களிலும் தாக்கினர். அராபியர் சிறிய தொகையின ராயிருந்ததாலும், தாயகத்திலிருந்து நீண்ட தொலைவு சென்று விட்டதாலும், நடு ஆசியாவை வெல்ல முழு முயற்சியுடன் போரில் ஈடுபட்டிருந்ததாலும் அவர்கள் ஐரோப்பாவை வெல்வதில் அக்கரை காட்டவில்லை. எனினும் ஐரோப்பியர், அராபியர் எழுச்சிகண்டு இடியேறு கேட்ட பட அரவுபோல் அஞ்சி நடுங்கினர் ; அராபியரின் எழுச்சியைத் தடுத்து நிறுத்தச் சார்லஸ் மார்டல் என்ற வீரன் தலை மையில் ஒரு கூட்டுப் படையணி அமைத்தனர். அப் படை பிரான்சு நாட்டில் டூர்ஸ் என்ற இடத்தில் அரா பியரை முறியடித்தது. இத்தோல்வி ஐரோப்பாவை அராபியரிடமிருந்து காத்தது. உலகப் பேரரசை நிறுவி, ஒரு குடைக்கீழ் ஆள விருந்த அராபியரின் நல்வாய்ப்பை, டூர்ஸ் போர்க்களம் தலைகீழாக மாற்றி விட்டது என்று ஒரு மேலே நாட்டு வரலாற்ருசிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/52&oldid=595603" இலிருந்து மீள்விக்கப்பட்டது