பக்கம்:பாரும் போரும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மங்கோலியர் :

ஆசியாவின் வறண்ட பகுதியான மங்கோலியப் பெருவெளியே மங்கோலியரின் தாயகமாகும். மங் கோலிய ஆண்களும் பெண்களும் உடற்கட்டும் உறுதியும் வாய்ந்தவர்கள் ; அஞ்சாநெஞ்சும், போர் வெறியும் கொண்டவர்கள். வளமற்றதும் குளிர் மிக் கதுமான பெருவெளிகளில் அமைக்கப்பட்ட கூடா ரங்களில் வாழ்ந்துவந்த இவர்கள், எத்தகைய இன் னலையும் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர் கள். வலிமையும் விரைவும் மிக்க குதிரைகளை வளர்க்க மங்கோலிய நாடு ஏற்ற தட்ப வெப்ப நிலை யைப் பெற்றிருந்ததால் குதிரை ஏற்றத்தில் இவர்கள் மிகவும் வல்லவர்களாயிருந்தனர்.

திடீரென்று இவர்கள் ஆற்றல் வளர்ந்தது. பல கூட்டங்களாகச் சிதறிக்கிடந்த இவர்கள் ஒன்றுபட் டனர். தங்களுக்கென ஒரு தலைவனைத் தேர்ந் தெடுத்து, அவனுக்கு அடங்கி நடப்பதாக உறுதி பூண்டனர். அவர்கள் தலைவன் மகாகான் என்று அழைக்கப்பட்டான். சீனநாட்டை வென்று புகழ் மிக்க கான் ஆட்சியை நிறுவியவர்கள் இவர்களே. மேற்கே படையெடுத்துச் சென்று, வழியிற் கண்ட பேரரசுகளே யெல்லாம் துடைத்துப் போக்கினர் ; உருசிய நாட்டை வென்று கைக்கொண்டனர் ; பாக் தாது நகரையும் அராபியப் பேரரசையும் அடியோடு இல்லாதொழித்து, ஐரோப்பாவில் போலந்துக்கப்பா லும்சென்றனர். இவர்களைத் தடுத்து நிறுத்துவார் எவ ருமில்லை. இந்தியா இவர்களிடமிருந்து தப்பிப் பிழை த்தது இந்நாட்டின் நல்வாய்ப்பே என்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/54&oldid=595607" இலிருந்து மீள்விக்கப்பட்டது