பக்கம்:பாரும் போரும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போர் வெறியர்கள்

தம் வாள் வலியால் உலகத்தையே நடுங்க வைத்த மாபெரும் படைத் தலைவர்கள் என்று உலக வரலாற்றிலே சிறப்பாகக் குறிக்கப்படுபவர்கள் அலெக்சாந்தர், ஜூலியசு சீசர், செங்கிஸ்கான், நெப்போலியன், அடால்ப் ஹிட்லர் ஆகிய ஐவருமே ஆவர். இவர்களால் மக்கள் இனத்திற்கு நன் மையைவிடத் தீமையே மிகுதி என்ருலும், இவர்க ளுடைய நெஞ்சுறுதியையும், மாற்றரும் போற்றும் மா வீரத்தையும், நுண்ணிய அறிவாற்றலேயும், தன் னம்பிக்கையையும், உலேயா ஊக்கத்தையும் நாம் வியக்காமலிருக்க முடியவில்லை. ஒரு வீழ் கொள்ளி வானில் திடீரென்று தோன்றிப் பெருஞ் சுடர் விட்டு விரைவில் அழிந்துபோவது போல் இவர்கள் அழிந்து போனுலும், உலக வரலாற்று வானில் என் றும் புகழொளி வீசிநிற்கும் வடமீனுக விளங்குகிருர் கள். இவர்கள் பேராற்றலே வியந்து போற்றுவோம்; ஆல்ை இவர்கள் மண்ணுசையை இகழ்ந்து துரற்று வோம்.

மாவீரன் அலெக்சாந்தர் :

கிரீசின் வட பகுதியான மாசிடோனியா நாடே அலெக்சாந்தரின் தாயகமாகும். மாசிடோனியர், பேரும் புகழும் கொண்டு நாகரிகத்தின் உச்சியிலே வாழ்ந்த கிரேக்கர் (Homoric Greeks) களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களல்லர். இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/57&oldid=595613" இலிருந்து மீள்விக்கப்பட்டது