பக்கம்:பாரும் போரும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

என்ற இந்திய மன்னன் அலெக்சாந்தரை எதிர்த்து வீரத்துடனும் அஞ்சாமையுடனும் போருடற்றின்ை. இறுதியில் புருடோத்தமன் தோல்வியுற்ருலும், அவன் வீரத்தையும் அஞ்சாமையையும் அலெக் சாந்தர் புகழ்ந்து, அவனுடைய நாட்டை அவ னுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டான். தட்சசீல மன்னனை அம்பி என்பான், கிரேக்கப் பெரும் படையைக்கண்டு அஞ்சி, ஆயிரம் மாடுகளைக் கொன்று பெருவிருந்து நடத்தி, அலெக்சாந்தரின் தாள் பணிந்தான். தாயகத்தை விட்டு நெடுந் தொலைவு வந்துவிட்டதாலும், பெற்ருேரையும் மனைவி மக்களையும் பிரிந்து அதிக நாள் ஆகிவிட்ட படியாலும், கிரேக்க வீரர்கள் ஊர் திரும்பும் எண் ணத்தில் மேற்செல்ல மறுத்தனர். ஆலெக்சாந்த ரின் ஆருயிர்க் குதிரை புசிபலசும் இறந்த்து. வேறு வழி இல்லாமல் அலெக்சாந்தர் நாடு திரும்பவேண் டிய தாயிற்று. திரும்பிச் செல்லும் வழியில், தன் முப்பத்து மூன்ரும் வயதில் பாபிலோன் என்ற விடத் தில் நோய்வாய்ப்பட்டு இறந்தான்.

தன்னுடைய குறுகிய காலவாழ்வில் இப்பெரிய மனிதன் சாதித்தது என்ன? சில போர்களைவென்று புகழ் கொண்டான். அவ்வளவே! இவன் பெரிய படைத் தலைவன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆல்ை எல்லையற்ற வீண்பெருமையும், தலைச் செருக்கும் கொண்டவன் ; எவ்விதக் கொடுமைகளே யும் அஞ்சாமல் செய்யும் உள்ளத்தைக் கொண் டிருந்தான்; ஆட்சிபீடம் ஏறியபொழுது தனக்கு இடையூருக இருந்த சிற்றன்னே (பிலிப்பின் இரண் டாம் மனைவி) யையும், அவள் பெற்ற பச்சிளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/60&oldid=595619" இலிருந்து மீள்விக்கப்பட்டது