பக்கம்:பாரும் போரும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

அப்போது கங்கைக்கரையில் பேரரசை நிறுவியிருந்த வலிமிக்க நந்தர்களிடம் மோதியிருந்தால் அவன் நிலை யாதாகியிருக்குமோ! சீனநாடு அலெக்சாந்தர் காலத்தில் செல்வச் சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் பெற்ற ஒரு பெருநாடாக விளங்கியது. அவன் அதற்கு அருகில் கூடச் செல்லவில்லை. இருந்தாலும் தன் குறுகிய வாழ்நாளில் இரண்டு கண்டங்களில் தன் பெயரை நிலைநாட்டியதோடு, முதன் முதலில் உலகத்தை வென்றவன் என்ற பெருமையையும் உலக வரலாற்றிலே நிலைநாட்டிவிட்டுச் சென்று விட்டான். வெகுதொலைவிலுள்ள நடு ஆசியாவில் அவனே இன்றும் மறவாமல் சிக்கந்தர் என்று அழைக் கிருர்கள் ; பல நகரங்கள் கூட அவன் பெயரால் நிறுவப்பட்டுள்ளன; எகிப்திலுள்ள அலெக்சாந் திரியா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஜூலியசு சீசர் :

ஜூலியசு சீசர் என்னும் சொல் ஆங்கில இலக் கிய உலகில் மங்காது புகழ் ஒளி வீசும் ஒரு பெய ராகும். உரோம நாட்டு வரலாற்றிலோ வெற்றிச் சுடர் பரப்பும் ஒரு பொன்னேடாகும். சீசரின் வர லாற்றை நாடகக் காவியமாக எழுதியதில் சேக்சு பியருக்குப் புகழா? அன்றிச் சேக்சுபியர் மகாகவி யால் தன் வரலாறு காவியமாக்கப்பட்டதால் சீசருக் குப் புகழா? என்று நாம் அறுதியிட்டுக் கூற முடி யாது. அந்நாடகத்தால் இருவருமே புகழ் எய்தினர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

கெயசு சீசர் என்ற செல்வச் சீமானுக்கு மகனுக ஜூலியசு சீசர் உரோமாபுரியில் பிறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/62&oldid=595623" இலிருந்து மீள்விக்கப்பட்டது