பக்கம்:பாரும் போரும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 'மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றற் போல, பாம்பி நாட்டைவிட்டு ஓடியும், அவன் தொல்லை ஓயவில்லை. பாம்பியின் ஆட்கள் ஸ்பெயி னில் பெருங் கிளர்ச்சி செய்தனர். உடனே சீசர் ஒரு பெரும் படையோடு ஸ்பெயினுக்குச் சென்று, அக் கிளர்ச்சிக்காரர்களை ஒழித்து அமைதியை நிலைநாட் டின்ை. வினை வலியும் தன் வலியும் மாற்ருன் வலி யும் துணைவலியும் தூக்கிச் செயலாற்றுவது, அரசி யலில் வீற்றிருக்கும் மாவீரர்களின் தலையாய கடமை யல்லவா? பாம்பியின் தன்மையைச் சீசர் நன் குணர்ந்தவன். பாம்பி தன்னிடத்தில் தோற்ருேடி ஞலும், உரோம நாட்டின் போற்றத்தகுந்த வீரர் களில் ஒருவன் என்பதைச் சீசர் நன்கு அறிந்திருந் தான். இளேதாக முள் மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து” என்ற உண்மை சீசருக்குத் தலைகீழ்ப் பாடம். எனவே உரோமாபுரி யில் மீண்டும் தன் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டு, 15,000 காலாட்களுடனும், 500 குதிரை வீரர்களுடனும் ஒரு சிறந்த கப்பற்படையுடனும், பாம்பி வாழ்ந்த கிரீசை நோக்கிச் சென்ருன். பாம்பி சீசரின் படையைப் போன்ற இருமடங்கு படையுடன் எதிர்த்துப் பெரும் போர் புரிந்தான். ஆனல் சீசரின் நுண்ணறிவும், செயலாற்றும் வன்மை யும், பாம்பியின் படையைப் படுதோல்வியடையு மாறு செய்துவிட்டன. பாம்பி தப்பியோடி எகிப்தை யடைந்து, அலெக்சாந்திரியாவில் ஆட்சி புரிந்து வந்த இளந்தாலமியிடம் சரண்புகுந்தான். பாம்பி தங்கள் நாட்டிலிருப்பது, தங்கள் ஆட்சிக்கு இடை பா. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/66&oldid=820525" இலிருந்து மீள்விக்கப்பட்டது