பக்கம்:பாரும் போரும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 யூறு என்று எண்ணிய இளந்தாலமி, வஞ்சனையாகப் பாம்பியைக் கொலை செய்தான். சீசர் பாம்பியைத் துரத்திக்கொண்டு எகிப்து வந்து சேர்ந்தான். பாம்பியின் தலை சீசரின் முன் ல்ை கொணரப்பட்டது. அதைக் கண்டதும் சீசரின் மனம் வருந்தியது. தன்னையொத்த ஒரு பெருவீரன் வஞ்சனேயால் கொல்லப்பட்டதற்குப் பெரிதும் உளங் கவன்ருன். எதிரியாக இருந்தாலும், பாம்பி தன் ஒரே மகளான ஜூலியாவின் கணவனல்லவா ! பாம்பியை வீழ்த்திய கொலக்காரர்களைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டான். பாம்பியின் வீரத்தைப் பாராட்டி, அவனது இறப்புக்காக மனம் வருந்திப் புலம்பியழுதான். இளந்தாலமியைக் கொன்ற பிறகு, அவன் உடன் பிறந்தாளான கிளியோப்பாத்திரையை எகிப்து நாட்டின் அரியணையில் அமர்த்தின்ை. கிளி யோப்பாத்திரை சிறந்த அழகி. தன் பேரழகால் உரோம நாட்டு வரலாற்றையே மாற்றி அமைத் தவள். சேக்சுபியர் இவளே ஒப்பற்றவளாகவும், சாகசக்காரியாகவும் கூறுகிருர் , திராய் நகர அழிவுக் குக் காரணமாக விளங்கிய கிரேக்கப் பேரழகி ஹெலனின் முழு அழகையும் கிளியோப்பாத்திரை யின் ஒரு புருவத்தில் காணலாம் என்று பாராட்டிப் பேசுகிருர். சீசர் அவள் வனப்பில் ஈடுபட்டுச் சிறிது காலம் அவளோடு வாழ்ந்தான். சீசர் ஒரு கடமை வீரன். கடமை உணர்ச்சி உந்தவே, எகிப்தை விட்டு உரோமாபுரிக்குப் புறப்பட்டான். இதற்குள்ளாக, உரோமப் பேரரசுக்கு அடங்கி வாழ்ந்த சிற்ருசியாவின் மன்னன், அங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/67&oldid=820526" இலிருந்து மீள்விக்கப்பட்டது