பக்கம்:பாரும் போரும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. டில், ஒன்பது திங்கள்களே இருந்தன. சீசர் மேலும் தொண்ணுாறு நாட்கள் கூட்டி, ஓர் ஆண்டிற்கு முந் நூற்று அறுபத்தைந்து நாட்கள் ஆறுமணி என்றும், நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை பிப்ரவரித் திங்க ளுக்கு இருபத்தொன்பது நாட்களென்றும் பேரறி ஞரைக் கலந்து மிகப்பொருத்தமான ஆண்டுக் குறிப் பேடு ஒன்றை உருவாக்கினன். உரோமாபுரியில் தோலபெல்லா என்ற மாநில ஆட்சித் தலைவன் (Governor) நெறி தவறிய முறை களில் பொருள் சேர்த்துச் செல்வந்தன் ஆனதன் விளைவாகக் குடிமக்களால் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டான். மக்கள் மன்றம் அவனை விடுதலை செய்துவிட்டது. ஆனல் சீசர் தன் நாவன்மை யாலும் அஞ்சாமையாலும் எல்லாரும் அவன் குற் றத்தை உணருமாறு செய்தான். தோலபெல்லாவும் கடுமையாக ஒறுக்கப்பட்டான். சீசர், கேட்டார்ப் பிணித்துக் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற் றல் பெற்றவன். பேச்சு வன்மை பெறுவதற்காக ரோட்சு (Rhodes) என்ற நகரின்கண் அமைந் திருந்தபேச்சுக்கலை மன்றத்தில் மாணவனுக இருந்து பயின்ருன். அப்பலோனியசு என்ற சொல்லேருழவர் சீசரின் நல்லாசிரியராக விளங்கினர். சீசர் சிறந்த எழுத்தாளனும்கூட. அவன் எழுதியுள்ள காலியா காட்டுப் போரைப் பற்றிய நூல் (De Bello Gallico) ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான கல்லூரிகளில் இன்றும் இளைஞர்களால் விருப்புடன் பயிலப்பட்டு வருகிறது. திங்கட் பெயர்களில் ஒன்ருன ஜூலை என்பது ஜூலியசின் நினைவாக வைக்கப்பட்டதாகும். சீசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/70&oldid=820529" இலிருந்து மீள்விக்கப்பட்டது