பக்கம்:பாரும் போரும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 என்ற சொல் பிற்காலத்தில் பேரரசன் என்ற பொரு ளில் வழங்கியது. ஜெர்மானியப் பேரரசனின் பெய ரான கெய்சர் என்பதும், உருசிய நாட்டு மன்னனின் பெயரான ஜார் என்பதும் சீசர் என்ற சொல்லி லிருந்து பெறப்பட்டவையே. கெய்சர் என்ற சொல் இந்துஸ்தானி மொழியிலும் நெடுங்காலமாக வழங்கி வருகிறது. கெய்சர்-இ-ரோம் (உரோமப் பேரரசர்), கெய்சர்-இ-ஹிந்த் (இந்திய நாட்டுப் பேரரசர்) என்று இந்துஸ்தானியில் சொல்லிவந்தோம். இங்கிலாந்து மன்னர்கள் கெய்சர்-இ-ஹிந்த் என்ற பட்டத்தை மகிழ்ச்சியுடன் பூண்டு விளங்கினர்கள். சீசரின் அறிவாற்றலும், ஆட்சித் திறனும் போற் றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவை. ஆல்ை அவன் பேராட்சி வெறி, பல நாட்டு மண்களில் குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடுமாறு செய்தது ; பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைச் சாக்கடலில் தள்ளியது; பல நாட்டு மக்கள் உரிமை இழந்து அடிமை வாழ்வை மேற்கொள்ளுமாறு செய் தது. அக்குற்றத்தை மக்கள் இனம் என்றும் மன் னிக்க முடியாது. செங்கிசுகான் : செங்கிசு என்ற சொல்லுக்கு வெற்றி வீரன் என் பது பொருள். அவன் இயற்பெயர் தாமுசின் என்பது. இப்பட்டப் பெயர் அவனுக்கு மக்களால் வழங்கப் பட்டது. செங்கிசு இளமையில் ஆதரவற்றவனுக இருந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவன். குருல் தாய் என்று அழைக்கப்பட்ட மங்கோலியப் பேரவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/71&oldid=820530" இலிருந்து மீள்விக்கப்பட்டது