பக்கம்:பாரும் போரும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அவனை மகாகாளுகத் தேர்ந்தெடுத்தது. மகாகான் என்ருல் பேரரசன் என்பது பொருள். மங்கோலியரின் முன்னுள் வாழ்வைப் பற்றி எந்தவித வரலாறும் இல்லை. கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டில் எழுதப்பட்டு, பதின்ைகாம் நூற்ருண் டில் சீனவில் வெளியிடப்பட்ட மங்கோலியரின் இரக சிய வரலாறு' என்னும் நூல் மகாகான் தேர்தலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது: " கம்பளிக் கூடாரங்களில் வாழ்ந்து வந்த மங் கோலியர் அனைவரும் கூடி ஒரே தலைவனின்கீழ் ஒன்றுபட்ட காலையில், அவர்கள் வேங்கைப் புலி ஆண்டில், ஒனன் ஆறு தோன்றுமிடத்துக்கு அருகில் பேரவை கூடி, ஒன்பது பீடங்களின் மேல் வெண்கொடி உயர்த்தி, மகாகான் என்ற பட்டத் தைச் செங்கிசுக்கு அளித்தார்கள்.” செங்கிசு மகாகான் ஆனபொழுது அவனுக்கு வயது ஐம்பத்தொன்று. ஆகவே அவனே இளைஞ னென்று சொல்வதற்கில்லை. இவ்வயதில் பெரும் பாலோர் உலகத் தொல்லைகளிலிருந்து நீங்கி ஓய் வும் அமைதியும் பெற விரும்புவர். ஆல்ை செங் கிசுகானின் வெற்றியும் வீரமும் செறிந்த வாழ்க்கை இப்பொழுதுதான் துவங்குகிறது. இது பெரு வியப் பிற்கும் சிந்தனைக்கும் உரிய செய்தியாகும். மாபெரும் வெற்றி வீரர்களெல்லாம் இளமையி லேயே போர் விருப்புக் கொண்டு விளங்குவர். ஆல்ை செங்கிசுகான் இளமைத் துடிப்பில் தன் படை யெடுப்புகளைத் துவக்கவில்லை ; நடுத்தர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/72&oldid=820531" இலிருந்து மீள்விக்கப்பட்டது