பக்கம்:பாரும் போரும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வயதைக் கடந்து தன் வாழ் நாளில் பெற்ற பட் டறிவை அடிப்படையாக வைத்து, முன்னெச் சரிக்கையோடு ஒவ்வொரு செயலையும் செய்தான். மங்கோலியரின் ஒற்றுமையும், கட்டுப்பாடும், பெருந்தொகையும் அவர்கள் வெற்றிக்குச் சிறந்த காரணங்களாக இருந்தாலும், செங்கிசுகானின் படைத் தலைமை அவர்கட்குக் கிடைத்திராவிட்டால் மங்கோலியப் பேரரசு உலகைக் கட்டியாண்டிருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம். அலெக் சாந்தரின் போராற்றலே ஒரு பேரிடிக்கு ஒப்பிட்டால் செங்கிசுகானின் போராற்றலேக் கரைபுரண்டுபாய்ந் தோடும் பெரிய காட்டாற்றுக்கு ஒப்பிடலாம். இடி தான் விழுந்த இடத்தை மட்டும் அழிக்கும். காட்டாறு எதிர்ப்பட்டவற்றை எல்லாம் அழித்து விட்டுச் சென்றுவிடும். போர்க்கலையறிவில் செங் கிசுகானுக்கு ஈடு சொல்லக்கூடிய படைத்தலைவன் இதுவரையில் உலக வரலாற்றிலேயே தோன்ற வில்லை என்று உறுதியாகக் கூறலாம். அவனுக்கு முன்னுல் அலெக்சாந்தரும் சீசரும் விளக்கின் முன் மின்மினி போல்வர். செங்கிசு தன்வரையில் பெரிய படைத் தலைவன் மட்டுமல்லன். தன்கீழிருந்த ஒவ் வொருவனையும், வலிமையும் அஞ்சாமையும் மிக்க அரியேறுகளாக மாற்றும் இரசவாதம் அறிந்திருந் தான். தாயகத்திலிருந்து பல்லாயிரக் கணக்கான கல்களுக்கு அப்பால் பகைவர் நாட்டில் தங்களே விடப் பெருந்தொகையுள்ள எதிரிகளை அவன் வீரர் கள் எளிதில் புறங்கண்டார்களென்ருல், செங்கிசின் போர்த் திறமைக்கு வேறு சான்று வேண்டியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/73&oldid=820532" இலிருந்து மீள்விக்கப்பட்டது