பக்கம்:பாரும் போரும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 செங்கிசுகானின்பேரரசு கிழக்கே பசிபிக்மாகடலி லிருந்து, மேற்கே கருங்கடல் வரையில் பரவியிருந் தது. வலிகுன்ருமல் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டேயிருந்தது. உலகத்தில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பை எந்த வீரனும் வென்றதில்லை. இப் பரந்த மங்கோலியப் பேரரசுக்கு மங்கோலியாவில் உள்ள காரகோரம் என்னும் சிற்றுரே தலைநகராக விளங்கியது. செங்கிசுகான் நாடோடியாகவும், கல்வியறிவற்றவனுகவும் இருந்தாலும், அரசியல் அமைப்புத் திறனில் மிகவும் வல்லவன். தனக்குக் கீழ் அறிவாற்றல் மிக்க அமைச்சர்களை வைத்துக் கொண்டு, அரசாட்சியைச் செம்மையுறச் செய்தான். தன்னுடைய எழுபத்திரண்டாம் வயதில் செங்கிசு கான் உயிர் துறந்தான் என்ருலும் அவன் இறப்பிற் குப் பிறகு, மங்கோலியப் பேரரசு சீர்குலைந்து போகா மலிருந்தது ஒன்றே, அவனுடைய கூரிய அரசியல் அறிவிற்கும், செயலாண்மைக்கும் சான்று பகர் கின்றது. அராபிய, பாரசீக வரலாற்ருசிரியர்களின் கண் களில் செங்கிசுகான் ஒரு கொடிய அரக்கனுகத் தென்படுகிருன். அவர்கள் அவனைக் கடவுளின் கொலைக் கருவி” என்று அழைக்கிருர்கள். செங்கிசு கான், நகரங்களை அழித்ததற்கு இன்னுெரு காரண மும் இருந்தது. நாடோடி உணர்ச்சி மிகுந்தவ ைைகயால்நகரங்களையும் பட்டணங்களையும் அவன் வெறுத்தான். பாழ்வெளிகளில் வாழ்வதையே அவன் விரும்பின்ை. ஒருசமயம் அவன் சீன நகரங் களே எல்லாம் தகர்த்துத் தரைமட்டமாக்கக் கருதின. ம்ை. ஆல்ை யார் செய்த நல்வினையோ, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/75&oldid=820534" இலிருந்து மீள்விக்கப்பட்டது