பக்கம்:பாரும் போரும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 O மாளுகவும் விளங்கின்ை. நெப்போலியன் என்ற சொல் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு ஒரு பேரிடியாக விளங்கியது. ஆனல் பிரெஞ்சு நாட்டு மக்களுக்கு உணர்ச்சியையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் மதிப் பிற்குரிய ஒரு சொல்லாக இன்று விளங்குகிறது. நெப்போலியன் கார்சிகா என்னும் தீவில் சார் லஸ் போனபார்டி என்ற வழக்கறிஞருக்கும், அழகும் பெருந்தன்மையும் வாய்ந்த இரமோலினி அம்மையா ருக்கும் பிறந்தான்; விளையும் பயிர் முளையிலே தெரி யும்’ என்பற்கேற்ப, ஒரு வீரனுக்குரிய உயர் பண்பு களெல்லாம் இளமையில் வாய்க்கப் பெற்றிருந்தான். மரத்தினுல் செய்த ஈட்டியும், துப்பாக்கியுமே இள மையில் அவனுடைய விளையாட்டுக் கருவிகள். போர் வீரர்கள் அணிவகுத்துச் செல்வதைக் காண்பதில் அவனுக்குப் பெருவிருப்பம் உண்டு. வீதிகளில் போருடை அணிந்து செல்லும் வீரர்களைக் கண்டால், அவர்கள் பின்னலேயே திரிவான். கீழ்ப்படிதல், வாய்மை, ஏழைக்கு இரங்கல் முதலியன, இளமையி லேயே அவன்பால் படிந்த தலையாய பண்புகளாம். அவன் உயர்வுக்கும், நற்பண்புகளுக்கும் காரணமாக விளங்கியவர், தாயாரான இரமோலினி அம்மை யாரே. நெப்போலியன் தன் தாயிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தான். தன் தாயைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும்போது, கணவனை இழந்த என்தாய் வேறு துணையின்றிக் குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளைத் தாயாகப் பெற்றது எங்கள் நற்பேறு என்று தான் கூறவேண்டும். இன்பத்தையும் துன்பத்தை யும் அவள் ஒன்று போல் எண்ணும் மனப் பண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/77&oldid=820536" இலிருந்து மீள்விக்கப்பட்டது