பக்கம்:பாரும் போரும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 'புடையவள். அவளைப் போன்ற ஓர் உயர்ந்த பெண் மணியை இப்பாரில் காண்பதரிது’ என்று புகழ்ந்து கூறியுள்ளான். சிறுவயதில் அவன் தன் சொந்த ஊரிலும், பிறகு பிரையன் என்ற இடத்திலிருந்த இராணுவக் கல்லூரி யிலும் கல்வி பயின்ருன்; கல்வியில் மிகவும் ஊக்கம் காட்டின்ை. வீண் பொழுதுபோக்கும் பழக்கம் அவ னிடத்தில் இல்லை. கணிதக் கலையில் மிகவும் திறமை காட்டினன். ஒருமுறை ஆசிரியர் அளித்த ஒரு கணக்கு, எந்த மாணவலுைம் செய்து முடிக்க முடிய வில்லை. நெப்போலியன் மூன்று நாள் தனியறை யில் அமர்ந்து இரவு பகலாக முயன்று அக்கணக் கைப் போட்டு முடித்தான். வரலாற்று நூல் கற்ப தில் அவனுக்குப் பேரார்வம் உண்டு. அவன் சொந்த ஊராகிய அஜேசியாவின் புறத்தே ஒரு பாறை உள் ளது. அவன் அதிலுள்ள குகையில் எப்பொழுதும் தனிமையில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பானும். அது இப்பொழுதும் நெப்போலியன் குகை' (Nepolean Grotto) 6T6ör [D] €916ogãôûLJ® ®pġ]. இராணுவக் கல்லூரியை விட்டு வெளியேறும் போது அவன் ஆசிரியர் பின் வருமாறு சான்றிதழ் வழங்கி யுள்ளார் : நெப்போலியன் போனபார்ட்டி நல்ல பழக்க வழக்கங்களும் கீழ்ப்படியும் பண்பும் உள்ள வன்; கணக்கில் வல்லவன் ; நிலநூற் கல்வியிலும், வரலாற்றுக் கல்வியிலும் நல்ல தேர்ச்சியுடையவன்; நல்ல அறிவாளி; படிப்பிலே கண்ணும் கருத்துமா யிருப்பவன்; சுறுசுறுப்புடையவன்; இராணுவத்திற்கு ஏற்றவன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/78&oldid=820537" இலிருந்து மீள்விக்கப்பட்டது